» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் அறிவியல் கண்காட்சி: மாணவர்கள் அசத்தல்!

ஞாயிறு 26, ஜனவரி 2025 9:03:12 AM (IST)



நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில்  மாணவர்கள் தங்களின் அறிவியல் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வகையில், பல்வேறு அறிவியல் செயல்முறைகளை காட்சிப்படுத்தி அசத்தியிருந்தனர்.

அறிவியல் கண்காட்சியானது மாணவர்களிடையே அறிவியல் கற்கும் ஆர்வத்தை வளர்ப்பதற்கான ஒரு தூண்டுகோலாக அமைந்துள்ளது .இது, அறிவு மற்றும் செயல் திறன்களை வெளிப்படுத்தி புதியன படைக்கவும் ஆழ்மனதில் உறுத்திக் கொண்டிருக்கும் மாணவர்களின் எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுக்கவும் வாய்ப்பளிக்கிறது. 

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை தலைமையாசிரியர் குனசீலராஜ்  ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். உதவி தலைமையாசிரியர் சார்லஸ் திரவியம் முன்னிலை வகித்தார். இக் கண்காட்சியில் பசுமை சார்ந்த அறிவியல் உபகரணங்களை  விளக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. இதில் மாணவர்கள், நீர் மற்றும் காற்றின் அழுத்தத்தில் இயங்கும் கருவிகள், நில நடுக்கத்தினை உணர்ந்து உடனடியாக ஒலி எழுப்பும் கருவி, இயற்கை முறையில் நீர் சுத்திகரிக்கும் கருவிகள், போன்றவற்றை வைத்திருந்தனர். 

இக் கண்காட்சியை ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பார்வையிட்டனர். தாங்கள் காட்சிப்படுத்திய உபகரணங்களின்  செயல்பாடுகளை, மாணவர்கள் மற்ற மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும்  விளக்கிக் கூறினர்.

 இக் கண்காட்சியில் இயற்பியல் ஆசிரியர்  ஜெர்சோம் ஜெபராஜ், அறிவியல் ஆசிரியர்கள்  ஜென்னிங்ஸ் காமராஜ், ஜெயந்தி சுபாஷினி, சோபியா பொன்ஸ், ஐசக் சந்தோஸ் பிரபு, உடற்கல்வி ஆசிரியர் தனபால், என்சிசி அலுவலர் சுஜித் செல்வசுந்தர், ஓவியக்கலை ஆசிரியர் அலெக்சன் கிறிஸ்டோபர், ஆகியோர்  கலந்து கொண்டு மாணவர்களையும்  ஊக்கமளித்து வகுப்பாசிரியர் களையும் பாராட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory