» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்கல்
செவ்வாய் 25, ஜூன் 2024 11:42:40 AM (IST)

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் இந்த கல்வியாண்டிற்கான தமிழக அரசின் விலையில்லா பாடப் புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து புதிதாக 6ம் வகுப்பு, 9ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்கும், ஏற்கனவே பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வகுப்பு வாரியாக பாட புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.தலைமை ஆசிரியர் குணசீலராஜ் தலைமை வகித்து மாணவர்களுக்கு பாட புத்தகங்களை வழங்கினார்.
இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ், பாட புத்தகங்களின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். பாட புத்தகங்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும், அன்றன்று நடத்தக்கூடிய பாடங்களை நாள்தோறும் கற்க வேண்டும், இந்த கல்வியாண்டில் மாணவர்கள் நன்கு கல்வி கற்று அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டன.
இதில் உடற்கல்வி இயக்குனர் பெலின் பாஸ்கர், என்சிசி அலுவலர் சுஜித் செல்வசுந்தர் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் சுதாகர், ஆசிரியர் அலெக்ஸன் கிறிஸ்டோபர், உடற்கல்வி ஆசிரியர் தனபால் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ் மன்றத் தேர்வில் வெற்றி : மர்காஷிஸ் மாணவர்களுக்கு பாராட்டு விழா
வியாழன் 20, மார்ச் 2025 8:08:57 AM (IST)

தூத்துக்குடி மரியன்னைக் கல்லூரி சார்பில் பறவைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சனி 8, மார்ச் 2025 5:22:04 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் அறிவியல் மன்றவிழா : மாணவர்கள் அசத்தல்!
சனி 8, மார்ச் 2025 4:43:30 PM (IST)

தூத்துக்குடி திருச்சிலுவை ஆரம்பப் பள்ளியில் ஆண்டு விழா
ஞாயிறு 2, மார்ச் 2025 11:44:25 AM (IST)

கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
வெள்ளி 21, பிப்ரவரி 2025 3:18:31 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் சிறப்பு கருத்தரங்கம்!
வியாழன் 20, பிப்ரவரி 2025 5:51:03 PM (IST)
