» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
செயின்ட் மதர் தெரேசா பொறியியல் கல்லூரியில் சுய மேம்பாட்டு திட்டம் !
செவ்வாய் 25, ஜூன் 2024 10:22:17 AM (IST)
செயின்ட் மதர் தெரேசா பொறியியல் கல்லூரியில் சுய மேம்பாட்டு திட்டம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
தூத்துக்குடி செயின்ட் மதர் தெரேசா பொறியியல் கல்லூரியில் அன்றாட வாழ்க்கையில் ஸ்மார்ட் இலக்குகளை எவ்வாறு அமைப்பது என்ற தலைப்பில் ரத்தினராஜ் இணை இயக்குனர் (ரிட்) மாப்பேட், வர்த்தக அமைச்சர், இந்திய அரசின் போர் துணை நிர்வாக இயக்குனர், மீன்வளத்துறை அமைச்சர் அரசு ஒப் இந்தியா சிறப்புரை வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஜாஸ்பர் ஞானச்சந்திரன் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர் பேசுகையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜர், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், செயின்ட் மதர் தெரசா அம்மையார் ஆகியோரது வாழ்க்கை முறைகளை பற்றி விவரித்தார் அவ்வாறு கூறுகையில் எளிமையாக வாழ்ந்து வெற்றி பெற்றனர் என்பதை மாணவர்களுக்கு உணர வைத்தார். மேலும் மாணவர்கள் தங்களது வாழ்நாளில் தினசரி கடை பிடிக்க வேண்டியது முக்கியமானது ஒழுக்கம் தன்நம்பிக்கை, விசுவாசம், நிலைத்தன்மை, கடின உழைப்பு, நேர மேலாண்மை என்று கூறி மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.
இந்நிகழ்ச்சி சிறப்பாக நடந்தமைக்கான வாழ்த்துகளை ஸ்காட் கல்வி குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு, தாளாளர் பிரியதர்ஷினி அருண் பாபு, பொது மேலாளர்கள் ஜெயக்குமார், கிருஷ்ணகுமார் ஜான் கென்னடி இயக்குனர் மாணவர் சேர்க்கை, ரவிசங்கர் இயக்குனர் வேலை வாய்ப்பு, கல்லூரி இயக்குனர் ஜார்ஜ் கிளின்டன் ஆகியோர்கள் தெரிவித்தனர், இந்நிகழ்ச்சியில் முதலாம் ஆண்டு துறை தலைவர் தாமஸ், கவிதா மற்றும் பேராசிரியர்கள், மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி விக்னேஷ் செய்திருந்தார்.