» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் கிறிஸ்மஸ் ஈகை விழா
சனி 30, நவம்பர் 2024 8:59:43 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்மஸ் ஈகை விழாவில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது.
விழாவிற்கு நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி தாளாளர் சுதாகர் தலைமை தாங்கினார். நாசரேத் தூய யோவான் பேராலய தலைமை குரு ஹென்றி ஜீவானந்தம் ஆரம்ப ஜெபம் செய்தார். தலைமை ஆசிரியர் குணசீலராஜ் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக புலனாய்வுத் துறையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற செல்வராஜ் கலந்து கொண்டு கிறிஸ்மஸ் செய்தி வழங்கினார். பள்ளி மாணவர்கள் கிறிஸ்மஸ் பாடல்களைப் பாடினர்.
தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கிறிஸ்மஸ் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.அதில் கிறிஸ்து பிறந்த முன்னனை காட்சியினை தத்ரூபமாக மாணவர்கள் நடித்து காண்பித்தனர். நிகழ்ச்சிகளை அறிவியல் ஆசிரியை ஜெயந்தி சுபாஷினி தொகுத்து வழங்கினார். தொடர்ந்து பள்ளியில் படிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கிறிஸ்மஸ் புத்தாடைகள் வழங்கப்பட்டது. நிறைவாக உதவி தலைமை ஆசிரியை சாரா ஞானபாய் நன்றி கூறினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, பள்ளித் தாளாளர் சுதாகர் ஆலோசனையின் பேரில் தலைமை ஆசிரியர் குணசீலராஜ், உதவி தலைமை ஆசிரியர் சார்லஸ் திரவியம், இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் அலுவலர்கள் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டி அரசு பள்ளியில் நிழல் இல்லா நாள் செயல் விளக்கபயிற்சி
திங்கள் 7, ஏப்ரல் 2025 4:27:22 PM (IST)

தமிழ் மன்றத் தேர்வில் வெற்றி : மர்காஷிஸ் மாணவர்களுக்கு பாராட்டு விழா
வியாழன் 20, மார்ச் 2025 8:08:57 AM (IST)

தூத்துக்குடி மரியன்னைக் கல்லூரி சார்பில் பறவைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சனி 8, மார்ச் 2025 5:22:04 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் அறிவியல் மன்றவிழா : மாணவர்கள் அசத்தல்!
சனி 8, மார்ச் 2025 4:43:30 PM (IST)

தூத்துக்குடி திருச்சிலுவை ஆரம்பப் பள்ளியில் ஆண்டு விழா
ஞாயிறு 2, மார்ச் 2025 11:44:25 AM (IST)

கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
வெள்ளி 21, பிப்ரவரி 2025 3:18:31 PM (IST)
