» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரி சார்பில் சுகாதார விழிப்புணர்வு முகாம்!
சனி 23, நவம்பர் 2024 4:35:40 PM (IST)

குலசேகரநல்லூர் கிராமத்தில் தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரி சார்பில் சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி, அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியின் தூய்மை இந்தியா இயக்கமும் வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த செயல்பாட்டு அமைப்பும் இணைந்து தூத்துக்குடி மாவட்டம் குலசேகரநல்லூர் கிராமத்தில் இன்று உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு சுத்தம் மற்றும் சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தல், கை கழுவுதல் மற்றும் குப்பைகளை அகற்றுதல் பற்றிய விழிப்புணர்வு சொற்பொழிவுகள் நடைபெற்றன. முகாமின் முக்கிய நிகழ்வாக ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா தலைமையில் சுத்தம் மற்றும் சுகாதார விழிப்புணர்வு பேரணி மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இவ்விழிப்புணர்வு முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி செயலர் ச.முரளிதரன் மற்றும் கல்லூரி முதல்வர் அ.ஜாய்சிலின் சர்மிளா ஆகியோரின் வழிகாட்டுதலின்படி பேராசிரியர்கள் ச.ஜெயபார்வதி, த.சண்முக செல்வசிவசங்கரி, இரா. தங்கசெல்வம் மற்றும் கே.சி.சண்முகப்ரியா செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டி அரசு பள்ளியில் நிழல் இல்லா நாள் செயல் விளக்கபயிற்சி
திங்கள் 7, ஏப்ரல் 2025 4:27:22 PM (IST)

தமிழ் மன்றத் தேர்வில் வெற்றி : மர்காஷிஸ் மாணவர்களுக்கு பாராட்டு விழா
வியாழன் 20, மார்ச் 2025 8:08:57 AM (IST)

தூத்துக்குடி மரியன்னைக் கல்லூரி சார்பில் பறவைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சனி 8, மார்ச் 2025 5:22:04 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் அறிவியல் மன்றவிழா : மாணவர்கள் அசத்தல்!
சனி 8, மார்ச் 2025 4:43:30 PM (IST)

தூத்துக்குடி திருச்சிலுவை ஆரம்பப் பள்ளியில் ஆண்டு விழா
ஞாயிறு 2, மார்ச் 2025 11:44:25 AM (IST)

கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
வெள்ளி 21, பிப்ரவரி 2025 3:18:31 PM (IST)
