» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் தேசிய மாணவர் படை தினவிழா

புதன் 27, நவம்பர் 2024 4:31:09 PM (IST)



நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் தேசிய மாணவர் படை தினவிழா நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி தேசிய மாணவர் தரைப் படையில் 100 மாணவர்களைக் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஒழுக்கமும், ஒற்றுமையும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் தேசிய மாணவர் படை இயங்கி வருகிறது.

பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் வைத்து நடைபெற்ற தேசிய மாணவர் படை தினவிழா   விழாவிற்கு தலைமை ஆசிரியர் குணசீலராஜ் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் சார்லஸ் திரவியம் முன்னிலை வகித்தார். தேசிய மாணவர் படை அலுவலர் சுஜித் செல்வசுந்தர் வரவேற்புரை ஆற்றினார். 

பள்ளி முதுகலை இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் தேசிய மாணவர் படை அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கம் மற்றும் ஒழுக்கத்துடன் கூடிய தலைமைத்துவத்தை மாணவர்களிடத்தில் வளர்ப்பதில்  முக்கிய பங்கு மற்றும் சமூக சேவையில் மாணவர்கள் தங்களை இணைத்துக் கொள்வதின் அவசியம் மற்றும் தேசிய மாணவர் படை  மாணவர்களுக்கு கிடைக்கக்கூடிய உயர்கல்வி வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை குறித்தும் எடுத்துரைத்தார்.

நிறைவாக உடற்கல்வி ஆசிரியர் தனபால் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தாளாளர் சுதாகர் ஆலோசனையின் பேரில் பள்ளி தலைமை ஆசிரியர் குணசீலராஜ், பள்ளி தேசிய மாணவர் படை அலுவலர் சுஜித் செல்வசுந்தர், இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் மற்றும்  ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory