» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் உலக மீன்வள தின விழா

வியாழன் 21, நவம்பர் 2024 9:43:45 PM (IST)



தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உலக மீன்வள தினத்தை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது

தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிலதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தூத்துக்குடியில் "மீனவர்களின் மீள்திறனை மேம்படுத்துதல்” என்ற தலைப்பில் ஒரு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சியானது 21.11.2024 அன்று தூத்துக்குடி மீன்பிடித் துறைமுக வளாகத்திலுள்ள மீன்வளத் தொழில்காப்பகம் மற்றும் தொழில்சார் பயிற்சி மையத்தில் உலக மீன்வள தினத்தைக் கொண்டாடும் முகமாக நடத்தப்பட்டது. 

இந்நிகழ்ச்சியை மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின், மீன்வள விரிவாக்கம், பொருளியல் மற்றும் புள்ளியியல் இராமநாதபுரம் மீன்வளத் தொழில்காப்பகம் மற்றும் தொழில்சார் பயிற்சி இயக்குனரகம்; சார்பிலும் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு  ப. அகிலன், முதல்வர், மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தூத்துக்குடி  தலைமை வகித்தார். அவர்தம் தலைமை உரையில் வளங்குன்றா மீன்பிடித்தலின் முக்கியத்துவத்தைப் பற்றி எடுத்துரைத்தார்.   

நீ. நீதிச்செல்வன், இயக்குநர் பொறுப்பு, மீன்வளத் தொழில்காப்பகம் மற்றும் தொழில்சார் பயிற்சி இயக்குனரகம், இராமநாதபுரம் மற்றும்  கோ. அருள் ஓளி, உதவிப்பேராசிரியர் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.   த. ரவிக்குமார், உதவிப் பேராசிரியர்  நிகழ்ச்சியில் நவீன மீன்பிடிக் கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் பற்றி உரை நிகழ்த்தினார்.   வே. கோமதி, உதவிப்பேராசிரியர்  நன்றியுரை ஆற்றினார்.  இந்நிகழ்வில் மொத்தம் 53 மீனவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். மீன்வள விரிவாக்கத்துறையின் உதவிப் பேராசிரியர்கள்  பி. மணிகண்டன்,  வி. கோமதி மற்றும் செல்வி ம கீதா ஆகியோர் நிகழ்ச்சியை மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.

உலக மீன் வள தினம் 2024- யை முன்னிட்டு "வளங்குன்றா கடல் மீன்வள மேலாண்மை”  பற்றிய விழிப்புணர்வை மீனவர்களிடையே ஏற்படுத்தும் பொருட்டு ஒரு நாள் விழிப்புணர்வு முகாம் 21.11.2024 அன்று தருவைக்குளம் மீனவ கிராமத்தில் எமது கல்லூரியின் மீன் வள உயிரியல் மற்றும் வள மேலாண்மைத் துறையானது தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையுடன் இணைந்து நடத்தியது.

மீன்நோயியல் மற்றும் சுகாதார மேலாண்மைத் துறை சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி "கற்பித்தல், வாதாடுதல், உடனே செயல்படுதல்” என்ற தலைப்பில் நடைபெற்றது. இதில்  ப. கிறிஸ்சோலைட், இணைப்பேராசிரியர் வரவேற்புரை நிகழ்த்தினார். கண்மூடித்தனமாக நுண்ணுயிர் கொல்லியின் பயன்பாடு மற்றும் அதன் விளைவுகளை குறித்து உரைநிகழ்த்தினார். கல்லூரி முதல்வர்  ப.அகிலன், நுண்ணுயிhர் கொல்லிகளை ஒழிப்பதற்கும், சிறந்த முறையில் பயன்படுத்துவதை ஊக்கப்படுத்துவதற்கும் ஒன்றிணைந்து செயல்படுவதன் அவசியத்தை வலியுறுத்தினார். 

தூத்துக்குடி அரசு மருத்துவர் கல்லூரியின் மூத்த உதவிப்பேராசிரியர் டாக்டர் இஸ்ரேல் ராஜா ஜோபி  உலகளாவிய ஆரோக்கியத்தில் நுண்ணுயிர் கொல்லியின் தாக்கம் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார். பாக்டீரியாக்களிடையே எதிர்ப்பு தன்மை தோன்றுவது, நுண்ணுயிர்கொல்லிகளைக் கவனமாக கையாளுதல், நோய் தொற்று ஏற்படுவதை குறைக்கவும் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவும், நுண்ணுயிர்கொல்லி கழிவுகளை கவனமாக அகற்றுதல் போன்றவற்றை அவர் வலியுறுத்தினார். டாக்டர் வெங்கடேச பெருமாள், உதவிப்பேராசிரியர் நுண்ணுயிர்கொல்லி எதிர்ப்பைத் தடுக்க நுண்ணுயிர் எதிர்ப்புகளின் பகுத்தறிவு பயன்பாடு குறித்தும் பேசினார்.

சா. ஆதித்தன், பேராசிரியர் மற்றும் தலைவர், மீன் வளர்ப்பு துறை  அவர் விக்டோரியா பள்ளியில் ஒரு விழிப்புணர்வு முகாமை நடத்தினார். தனது உரையில் உலக மீன்வள தினத்தை கொண்டாடுவதின் முக்கியத்துவம் வளங்குன்றா மீன் வள மேலாண்மை முறைகள் பின் பற்றப்படாததால் நன்னீர் மற்றும் கடல்சார் வளங்கள் குறைந்து கொண்டிருக்கின்றன என்றும் மீனவ சமுதாயம் மற்றும் இளைஞர்களிடையே மீன் வள பாதுகாப்பு மற்றும் மேலாண்மை முறைகள் குறித்த விழிப்புணர்வு இருத்தல் வேண்டும் என்றும் விரிவாக எடுத்து கூறினார். இந்த நிகழ்ச்சியில் உலக மீன்வள தினத்திற்கான உறுதி மொழியை பள்ளி மாணவர்கள் எடுத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory