» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் சான்றிதழ் படிப்புக்கான பட்டமளிப்பு விழா
வியாழன் 30, மே 2024 8:27:10 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி மாணவர்களுக்கு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தொழில் முனைவோர் மற்றும் சுயவேலை மேம்பாட்டு நிறுவனம் சார்பாக நடைபெற்ற சான்றிதழ் பாடத்திற்கான பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.
கல்லூரியின் வணிகவியல் துறை சார்பாக தளவாடங்கள் மற்றும் கொள்கலன் முனைய மேலாண்மை மற்றும் வரி பயிற்சியாளர் படிப்புகளும், விலங்கியல் துறை மாணவர்களுக்கு அவசர உதவி மற்றும் இருதய பாதுகாப்பு உதவியாளர் படிப்புக்களும் மேற்கொள்ளப்பட்டு இக்கல்வியாண்டில் அனைவரும் தேர்ச்சி அடைந்து இப்பட்டத்தினை பெற்றுக் கொண்டனர். இச்சான்றிதழ் படிப்பில் திறன் வளர்க்கக்கூடிய பயிற்சிப் பட்டறைகளை கொடுப்பதோடு மட்டுமல்லாமல் வேலைவாய்ப்புக்குத் தேவையான ‘Hands on Training'யும் பல நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்து நடத்தப்பட்டது.
இவ்விழாவில் கல்லூரியின் செயலாளர் A.P.C.V. சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். பாரதிதாசன் பல்கலைக்கழகம், தொழில் முனைவோர் மற்றும் சுயவேலை மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநர் E.இராம்கணேஷ் சிறப்பு விருந்தினராகவும், மருத்துவர் T.நீலாம்புஜன், சுந்தரம் அருள்ராஜ் மருத்துவ நிறுவனம் மற்றும் மருத்துவமனை, தூத்துக்குடி, அமீர் ஆதாம், முதன்மை மனிதவள மேலாளர், தக்ஷின் பாரத் கேட்வே டெர்மினல் பிரைவேட் லிமிடெட், தூத்துக்குடி A.சக்கரவர்த்தி, பட்டய கணக்காளர், மது நீனா நிறுவனம், தூத்துக்குடி மற்றும் P.கிளிராஜா, SSS அசோசியேட் ஆகியோர்கள் சிறப்பு அழைப்பாளர்களாகவும் கலந்து கொண்டனர். கல்லூரியின் முதல்வர் சொ.வீரபாகு வரவேற்புரை வழங்கினார். விலங்கியல் துறைத் தலைவர் து.ராதிகா நன்றியுரை ஆற்றினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூய இஞ்ஞாசியார் பள்ளியில் சுற்றுச்சூழல் தினம்
புதன் 18, ஜூன் 2025 3:09:33 PM (IST)

மாணவ, மாணவிகளுக்கு நோட்டு வழங்கும் விழா
செவ்வாய் 17, ஜூன் 2025 12:12:13 PM (IST)

தூத்துக்குடியில் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீருடை வழங்கல்!
திங்கள் 16, ஜூன் 2025 4:47:10 PM (IST)

பாரதியார் வித்யாலயம் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
செவ்வாய் 3, ஜூன் 2025 10:44:57 AM (IST)

தூத்துக்குடியில் சிறார்களுக்கு காகிதத்தில் பொம்மை செய்தல் பயிற்சி
சனி 24, மே 2025 4:00:22 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி கல்வியியல் கல்லூரியில் கவின் கலைவிழா
திங்கள் 19, மே 2025 10:09:10 AM (IST)
