» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாகலாபுரம் பள்ளியில் இலவச ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி மற்றும் யோகா பயிற்சி

வியாழன் 9, மே 2024 10:57:20 AM (IST)நாகலாபுரம் சாமி அய்யா நாடார் மேல் நிலைப் பள்ளியில் இலவச ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி மற்றும் யோகா பயிற்சி நடந்தது. 

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலூகா, கோவில்பட்டி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட நாகலாபுரம் சாமி அய்யா நாடார் மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் 7 நாட்கள் இலவச ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி மற்றும் யோகா பயிற்சி தனித்தனியா இரு வேளைகளில் நடந்தது. 

பயிற்சியாளர்களாக முதுகலை ஆங்கில முதுகலை ஆசிரியர் ஜான் ஸ்டேனி, அரசியல் அறிவியல் முதுகலை ஆசிரியர் குணசேகரன், மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் கவிதா, ரமேஷ்,உடற்கல்வி ஆசிரியை நர்மதா ஆகியோர் கலந்து கொண்டு ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதற்கான அடிப்படை பயிற்சி மற்றும் யோகா பயிற்சிகளை 7 நாட்கள் தொடர்ந்து அளித்தனர். 

பயிற்சி நிறைவு நாள் அன்று கலந்து கொண்ட 24 பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு பள்ளியின் செயலாளர் மற்றும் மேளாள் கல்லூரி பேராசிரியர் பால்பாண்டியன் தலைமை வகித்து மாணவர்களின் கற்றல் திறன்களை மதிப்பீடு செய்து பாராட்டி வாழ்த்து தெரிவித்து சான்றிதழ்களை வழங்கினார். 

தொடர்ந்து பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை நிர்வாகத்தின் பொறுப்பாளர்கள் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் நாகலாபுரம் பள்ளி வாசல் தெரு நாடார் உறவின்முறைத் தலைவர் காசிராஜன் செயலர் பாஸ்கர்,பள்ளி நிர்வாகக்குழு தலைவர் தங்கமணி, செயலர் மாரி கண்ணபிரான் ஆகியோர் முன்னிலை வகித்து வாழ்த்தி பேசினர். முன்னதாக தலைமை ஆசிரியை சுப்புலட்சுமி அனைவரையும் வரவேற்றார், முடிவில் முதுகலை ஆங்கில ஆசிரியர் ஜான் ஸ்டானி நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory