» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
35 ஆண்டுகளுக்குப் பின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
செவ்வாய் 7, மே 2024 11:16:02 AM (IST)
பண்ணைவிளை பங்களா தக்கர் மேல்நிலைப் பள்ளியில் 35 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவ மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் பண்ணைவிளை பங்களா தக்கர் மேல்நிலைப் பள்ளியில் 1988 முதல் 1991இல் பயின்ற மாணவ மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி கடந்த 05.05.24 அன்று தக்கர் மேல்நிலை பள்ளியில் வைத்து நடைபெற்றது. விழாவிற்கு 1991இல் தலைமை ஆசிரியராக பணியாற்றிய ஜவஹர்லால் அவர்கள் தலைமை வகித்தார்கள். மேலும் தற்போதைய தலைமை ஆசிரியர் ஆல்பர்ட் அவர்களும் தாளாளர் அவர்களும் சேகர குருவானவர் ஜான் வெஸ்லி அவர்களும் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தங்களுக்கு கல்வி கற்பித்த ஆசிரிய பெருமக்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்து அவர்களை விழாவிற்கு அழைத்து அனைத்து ஆசிரிய பெருமக்களையும் கௌரவப்படுத்தி நினைவு பரிசு வழங்கி அவர்களிடம் அனைத்து மாணவர்களும் ஆசி பெற்றனர். விழாவின் தொடக்கமாக முன்னாள் மாணவர் சேகர் அனைவரையும் வரவேற்று பேசினார் அதனைத் தொடர்ந்து மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் மாணவி வழக்குரைஞர் மோனிகா முன்னாள் மாணவர் உதவி ஆய்வாளர் தங்கராஜ் மத்திய காவல்துறை பணி ஓய்வு பெற்ற பெரியசாமி முன்னாள் மாணவர் குருவனவர்.டேனியல் எட்வின் முன்னாள் மாணவர் கணினி ஆசிரியர் சாமுவேல் தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிவகளை முன்னாள் பஞ்சாயத்து தலைவரும் தக்கர் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவருமான கணபதி ராஜா அவர்கள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். முன்னாள் மாணவரும் மருத்துவரும் ஆன டாக்டர் மாரிமுத்து அவர்களும் சென்னை தீயணைப்புத்துறை காவல் அதிகாரி அருணாச்சலம் அவர்கள் மற்றும் முன்னாள் மாணவர் ஸ்ரீ கணேசனர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் முனைவர் முருகன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். முன்னாள் மாணவர் திருமலை அவர்கள் நன்றி கூறினார்.
தங்களுடன் பயின்ற சக மாணவர்கள் ஒரு சிலர் இறைவனடி சேர்ந்து விட்டனர். அவர்களுடைய குழந்தைகளின் கல்விக்காக நிதி உதவி வழங்கினார்கள். மேலும் பள்ளியின் வாகனம் வாங்குவதற்காகவும் தற்காலிகமாக ஒரு குறிப்பிட்ட நிதியை வழங்கினார்கள். பள்ளி கட்டிட நிதிக்காக பழைய மாணவர்களிடமிருந்து ஒரு பெரும் தொகையை வசூல் செய்து கொடுப்பதாகவும் உறுதியளித்தனர். பின்னர் நடைபெற்ற மதிய விருந்தில் ஆசிரியர் பெருமக்களும் முன்னாள் மாணவர்களும் மாணவருடைய குடும்பத்தினரும் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து ஆசிரியர் பெருமக்களுக்கும் முன்னாள் மாணாக்கர்களுக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. இனிய விழாவினை முன்னாள் மாணவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து சிறப்பாக செய்திருந்தனர். இவ்விழாவுக்கு முன்மாதிரியாக செயல்பட்ட முன்னாள் மாணவி ஆசிரியை ஹெப்சிபா சுகந்தி முன்னாள் மாணவி வழக்குரைஞர் மோனிகா அவர்களுக்கும் அவர்களோடு உறுதுணையாக இருந்து விழாவை வெற்றி பெறச் செய்த முன்னாள் மாணவர் சேகர்,கணபதி ராஜா, தங்கராஜ், சாமுவேல், பெரியசாமி, மணி ஆகியோருக்கும் அனைத்து மாணவ மாணவிகளும் நன்றி கூறி சென்றனர்.