» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

புனித லூக்கா சமுதாய கல்லூரியில் மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு சிறப்பு பயிற்சி

வெள்ளி 26, ஏப்ரல் 2024 8:10:14 PM (IST)



நாசரேத் புனித லூக்கா சமுதாய கல்லூரியில் மாணவிகளுக்கு வேலை வாய்ப்புக்கான சிறப்பு பயிற்சி நடந்தது. 

நாசரேத் புனித லூக்கா சமுதாய கல்லூரியில் மாணவிகளுக்கு திறன் மேம்பாடு, வாழ்க்கையை நிர்ணயிக்கும் திறமைகள் மற்றும் வேலை வாய்ப்புக்கான சிறப்பு பயிற்சி 5 நாட்கள் நடந்தது. திட்ட ஒருங்கிணைப்பாளர் எட்வின் தலைமை வகித்து பயிற்சியை தொடங்கி வைத்தார். கல்லூரி இயக்குனர் பேரா.ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தார். சென்னை ஜிடிடி பவுண்டேஷன் அமைப்பினர் பயிற்சி யை நடத்தினர்.

பயிற்சியாளர் ராஜ் பிரபு மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார். ஜிடிடி பவுண்டேஷன் அமைப்பு துணை பொது மேலாளர் காஞ்சனா பயிற்சியை பார்வையிட்டார். இந்த பயிற்சி மாணவிகளுக்கு பயனுள்ளதாக காணப்பட்டது.இதில் ஆசிரியர்கள், அலுவலர்கள் , மாணவிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் செல்வின், இயக்குனர் ஜெயச்சந்திரன் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory