» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
செல்போன் பார்த்ததைப் பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை!
புதன் 12, ஆகஸ்ட் 2026 5:58:05 PM (IST)
ஸ்ரீவைகுண்டம் அருகே செல்போன் பார்த்ததைப் பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த கல்லூரி மாணவி விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள திருப்புளியங்குடி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சந்திரமோகன். இவரது மகள் இலக்கிய ஸ்ரீநிதி (22). இவர் நாசரேத்தில் உள்ள ஒரு கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்தார். மாணவி ஸ்ரீநிதி வீட்டு வேலைகளைச் செய்யாமல் தொடர்ந்து செல்போன் பார்த்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த ஸ்ரீநிதி, சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், அவரை உடனடியாக மீட்டுச் சிகிச்சைக்காகப் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு ஸ்ரீநிதி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஸ்ரீவைகுண்டம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமைச்சர் வன்னி அரசிடம் பனை பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை மனு அளிப்பு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:54:57 PM (IST)

பாரதியார் வித்யாலயம் பள்ளியில் இருபெரும் விழா
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:50:20 PM (IST)

அரசு செய்திகளில் சைகை மொழிபெயர்ப்புத் திரையை பெரிதாக்க வேண்டும்: மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் வலியுறுத்தல்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 4:20:19 PM (IST)

டைல்ஸ் கல்லால் தாக்கி விவசாயி படுகொலை: தூத்துக்குடி அருகே பயங்கரம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:31:32 PM (IST)

தேவாலய கோபுர கான்கிரீட் சரிந்து விபத்து: 4பேர் உயிருடன் மீட்பு - தூத்துக்குடி அருகே பரபரப்பு
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:15:29 PM (IST)

க.சுப்பிரமணியபுரத்தில் செல்லியம்மன் கோவில் ஆடி கொடை விழா: முளைப்பாரி ஊர்வலம் கோலாகலம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:06:09 PM (IST)







