» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் நீர்வளத்துறை பணிகளை ஆட்சியர் விஷூ மகாஜன் நேரில் களஆய்வு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 12:54:51 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு குளங்கள், கால்வாய்கள் மற்றும் அணைக்கட்டு பகுதிகளை மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன் இன்று நேரில் சென்று பார்வையிட்டுப் களஆய்வு மேற்கொண்டார்.
நாட்டார் குளம், செய்தூங்கநல்லூர் தூதிகுழி குளம், வெள்ளூர் குளம், வெள்ளமடம் தென்கரை குளம், முதலைமொழி குளம் மற்றும் கீழப்புதுக்குளம் கிராமத்தில் உள்ள குளம் ஆகியவற்றை நேரில் ஆய்வு செய்தார்.
செய்தூங்கநல்லூர், கால்வாய் கிராமம் மற்றும் வெள்ளமடம் கிராமங்கள் வழியாகச் செல்லும் மருதூர் மேலக்கால்வாய்/கீழக்கால்வாய் பகுதிகளைப் பார்வையிட்டுத் தூர்வாரும் பணிகள் மற்றும் நீர்வரத்து குறித்து ஆய்வு செய்தார்.
சுப்பராயபுரம் அணைக்கட்டுப் பகுதியை ஆய்வு செய்த ஆட்சியர், தொடர்ந்து சாத்தான்குளம் கரையடி சுடலைமாடசாமி கோவில் அருகில் ரூ.14 கோடி மதிப்பீட்டில் புதிய தடுப்பணை அமைப்பது தொடர்பாக களஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது நீர்வளத்துறை அதிகாரிகளுடன் உடனிருந்து, நீர்நிலைகளைப் பராமரித்தல் மற்றும் பாசன வசதிகளை மேம்படுத்துதல் தொடர்பான பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியர் அறிவுறுத்தினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு செய்திகளில் சைகை மொழிபெயர்ப்புத் திரையை பெரிதாக்க வேண்டும்: மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் வலியுறுத்தல்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 4:20:19 PM (IST)

டைல்ஸ் கல்லால் தாக்கி விவசாயி படுகொலை: தூத்துக்குடி அருகே பயங்கரம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:31:32 PM (IST)

தேவாலய கோபுர கான்கிரீட் சரிந்து விபத்து: 4பேர் உயிருடன் மீட்பு - தூத்துக்குடி அருகே பரபரப்பு
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:15:29 PM (IST)

க.சுப்பிரமணியபுரத்தில் செல்லியம்மன் கோவில் ஆடி கொடை விழா: முளைப்பாரி ஊர்வலம் கோலாகலம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:06:09 PM (IST)

அழகுமுத்துக்கோன் குருபூஜை விழா மாட்டு வண்டி எல்லைப் பந்தயம்: சீறிப் பாய்ந்த காளைகள்!!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:19:43 AM (IST)

தூத்துக்குடியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒத்திவைப்பு - ஆக.21ல் நடைபெறும் என அறிவிப்பு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 10:15:46 AM (IST)







