» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

டைல்ஸ் கல்லால் தாக்கி விவசாயி படுகொலை: தூத்துக்குடி அருகே பயங்கரம்!

வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:31:32 PM (IST)

தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் நள்ளிரவில் விவசாயி ஒருவர் டைல்ஸ் கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி பிரையண்ட் நகரைச் சேர்ந்தவர் ஞானப்பிரகாசம் (47). இவரது மனைவி பாரதி; இவர்களுக்கு 2 மகள்களும் 2 மகன்களும் உள்ளனர். ஞானப்பிரகாசம் தற்போது புதுக்கோட்டை அருகே கூட்டாம்புளி மெயின் ரோட்டில் உள்ள டெய்லர் கடைத் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து, தனது குடும்பத்துடன் தங்கி விவசாயம் செய்து வந்தார்.

நேற்று நள்ளிரவில் ஞானப்பிரகாசத்தின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அப்போது அந்த நபரிடம் சத்தம்போட்டுப் பேசியவாறே வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அதன் பிறகு அவர் மீண்டும் வீட்டிற்குத் திரும்பி வரவில்லை. இந்நிலையில், இன்று காலை வீட்டின் அருகில் உள்ள காலி இடத்தில் ஞானப்பிரகாசம் தலையில் டைல்ஸ் கல்லால் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார்.

தகவல் அறிந்து எஸ்பி சிவபிரசாத், ரூரல் டிஎஸ்பி சுதீர், புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் குமாரவேல்பாண்டியன், எஸ்ஐ முத்துசெல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.     உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மோப்பநாய் வரவழைக்கப்பட்டுச் சோதனை நடத்தப்பட்டதுடன், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். ஞானப்பிரகாசத்தின் செல்போனில் பேசிய நபர் யார்? முன்விரோதம் அல்லது வேறு ஏதேனும் காரணம் காரணமாக இந்தக் கொலை நடந்ததா? எனப் பல்வேறு கோணங்களில் புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory