» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பாரதியார் வித்யாலயம் பள்ளியில் இருபெரும் விழா
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:50:20 PM (IST)

தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் குலபதி ஏ.பி.சி. வீரபாகு 44-ஆம் ஆண்டு நினைவு விழா மற்றும் வ.உ.சி. இலக்கிய மன்றத் தொடக்க விழா நடைபெற்றன.
இன்று காலையில் நடைபெற்ற சிறப்புப் பிரார்த்தனைக் கூட்டத்தில், குலபதி ஏ.பி.சி. வீரபாகு திருவுருவப் படத்திற்குச் பள்ளி ஆசிரியப் பெருமக்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, குறுவட்ட அளவிலான கபடி, வளையப்பந்து மற்றும் தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற 22 மாணவ, மாணவிகளுக்குப் பள்ளியின் செயலர் ஏ.பி.சி.வி. சண்முகம் அவர்களின் சார்பில், முதுகலை ஆசிரியர் ஐசையா கைக்கடிகாரங்களைப் பரிசாக வழங்கிப் பாராட்டினார்.
மாலையில் நடைபெற்ற விழாவிற்குப் பேச்சாளரும், வானொலி நிலைய நிகழ்ச்சித் தொகுப்பாளரும், சமூக ஆர்வலருமான ஜெ. காமாட்சி தலைமையேற்று, குலபதி ஏ.பி.சி. வீரபாகு அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் சிறப்புரையாற்றினார். நாவலாசிரியரும், அகில இந்திய வானொலி நிலைய அறிவிப்பாளருமான . கண்ணம்மாள் ஸ்ரீதர் "இலக்கிய சிந்தனைகள்" என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவாற்றி, வ.உ.சி. இலக்கிய மன்றத்தைத் தொடங்கி வைத்தார்.
விழாவில் பள்ளித் தலைமையாசிரியர் தட்சிணாமூர்த்தி வரவேற்புரையாற்றினார்; முதுகலை ஆசிரியை . மரகதவள்ளி நன்றியுரையாற்றினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற இவ்விழாவினைப் பட்டதாரி ஆசிரியை அந்தோணி ஆஸ்மின் தொகுத்து வழங்கினார். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளித் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமைச்சர் வன்னி அரசிடம் பனை பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை மனு அளிப்பு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:54:57 PM (IST)

அரசு செய்திகளில் சைகை மொழிபெயர்ப்புத் திரையை பெரிதாக்க வேண்டும்: மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் வலியுறுத்தல்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 4:20:19 PM (IST)

டைல்ஸ் கல்லால் தாக்கி விவசாயி படுகொலை: தூத்துக்குடி அருகே பயங்கரம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:31:32 PM (IST)

தேவாலய கோபுர கான்கிரீட் சரிந்து விபத்து: 4பேர் உயிருடன் மீட்பு - தூத்துக்குடி அருகே பரபரப்பு
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:15:29 PM (IST)

க.சுப்பிரமணியபுரத்தில் செல்லியம்மன் கோவில் ஆடி கொடை விழா: முளைப்பாரி ஊர்வலம் கோலாகலம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:06:09 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் நீர்வளத்துறை பணிகளை ஆட்சியர் விஷூ மகாஜன் நேரில் களஆய்வு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 12:54:51 PM (IST)







