» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தவெக அரசைக் கண்டித்து ஆகஸ்ட் 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்: எஸ்.பி. சண்முகநாதன் அறிக்கை!

புதன் 12, ஆகஸ்ட் 2026 3:18:08 PM (IST)

விவசாயிகளின் பயிர்க் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யாததைக் கண்டித்தும், மேகதாது மற்றும் காவிரி நீர்ப் பிரச்சினையில் மெத்தனம் காட்டி வரும் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசைக் கண்டித்தும் தூத்துக்குடியில் ஆகஸ்ட் 14-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யாமல் வஞ்சித்து வரும் தவெக அரசைக் கண்டித்தும், மேகதாது பிரச்சினையில் மெத்தனம் காட்டி காவிரியில் தமிழகத்திற்குரிய பங்கு நீரைப் பெற்றுத் தர முயற்சி செய்யாத தமிழக அரசைக் கண்டித்தும், அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடியில் 14.08.2026 (வெள்ளிக்கிழமை) காலை 09:30 மணிக்கு வி.வி.டி. சிக்னல் அருகே உள்ள எம்.ஜி.ஆர். திடலில் நடைபெறும் இப்போராட்டத்தில் அதிமுக கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே. சிங்காரம் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளும், மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி, வார்டு மற்றும் கிளைக் கழக நிர்வாகிகளும், சார்பு அணி நிர்வாகிகளும், பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்து கொள்ளுமாறு எஸ்.பி. சண்முகநாதன் கேட்டுக்கொண்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory