» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மின்னொளி கைப்பந்து போட்டி: டி.எஸ்.பி. சுனில் பரிசுகளை வழங்கினார்

புதன் 12, ஆகஸ்ட் 2026 3:08:12 PM (IST)

Volleyball.jpg

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான போதைக்கு எதிரான விழிப்புணர்வு மின்னொளி வாலிபால் போட்டி, நடைபெற்றது.

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நகரில் உள்ள 4 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ அணிகள் பங்கேற்று விளையாடினார்கள். முன்னதாக, காவல் உதவி ஆய்வாளர் சிவக்குமார் வரவேற்புரையாற்றினார். காவல் ஆய்வாளர் வேல்ராஜ் தலைமை தாங்கி போட்டியைத் தொடங்கி வைத்தார். லீக் முறையில் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முடிவில் செயின்ட் சேவியர்ஸ் மேல்நிலைப்பள்ளி வெற்றி பெற்றது. 

லசால் மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடம், கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி  மூன்றாமிடம், செயின்ட் தாமஸ் மேல்நிலைப்பள்ளி நான்காமிடம் பிடித்தன.  பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்குச் சிறப்பு விருந்தினராகத் தூத்துக்குடி டவுன் காவல் துணை கண்காணிப்பாளர் சுனில் கலந்துகொண்டு, வெற்றி பெற்ற அணிகளுக்கு வடபாகம் காவல் நிலையம் சார்பில் கோப்பைகளையும் சான்றிதழ்களையும் வழங்கிப் பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர்கள் பாலமுருகன், பாஸ்கரன், சுணை முருகன், உதவி ஆய்வாளர்கள் சிவக்குமார், நிவேதா, தூத்துக்குடி வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜவகர், செயலாளர் ராஜா, வழக்கறிஞர் சின்னத்தம்பி, அகில இந்தியக் கைப்பந்து கழக வீரர் ஜெயபால், ஆசிரியர் பெனிட்டன் உட்படத் திரளானோர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory