» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மின்சாரம் தாக்கி பெண் உள்பட 2பேர் பரிதாப சாவு
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:30:22 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் வெவ்வேறு பகுதிகளில் மின்சாரம் தாக்கி மாநகராட்சி பெண் தூய்மைப் பணியாளர் உள்பட 2பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு அருகேயுள்ள அனவரலநல்லூர், சமவத்துவபுரம், அன்பு நகரைச் சேர்ந்தவர் சுடலை. இவரது மனைவி செல்லம்மாள் (46). இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். தம்பதியர் இருவரும் திருநெல்வேலி மாநகராட்சியில் தற்காலிகமாக தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் செல்லம்மாள் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது ஸ்விட்ச் போர்டில் உள்ள தூசியை எடுப்பதற்காக முயன்றபோது அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்துள்ளார். இதையடுத்து உறவினர்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை ராமச்சந்திராபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் சந்திகாவலன் மகன் சண்முகம் (40). சண்முகம் நேற்று தனது வீட்டில் உள்ள மோட்டார் சுவிட்சை போடும் பொழுது மோட்டாரில் மின்கசிவு இருந்தால் அவர் உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமைச்சர் வன்னி அரசிடம் பனை பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை மனு அளிப்பு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:54:57 PM (IST)

பாரதியார் வித்யாலயம் பள்ளியில் இருபெரும் விழா
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:50:20 PM (IST)

அரசு செய்திகளில் சைகை மொழிபெயர்ப்புத் திரையை பெரிதாக்க வேண்டும்: மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் வலியுறுத்தல்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 4:20:19 PM (IST)

டைல்ஸ் கல்லால் தாக்கி விவசாயி படுகொலை: தூத்துக்குடி அருகே பயங்கரம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:31:32 PM (IST)

தேவாலய கோபுர கான்கிரீட் சரிந்து விபத்து: 4பேர் உயிருடன் மீட்பு - தூத்துக்குடி அருகே பரபரப்பு
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:15:29 PM (IST)

க.சுப்பிரமணியபுரத்தில் செல்லியம்மன் கோவில் ஆடி கொடை விழா: முளைப்பாரி ஊர்வலம் கோலாகலம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:06:09 PM (IST)







