» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து கோழிக்கடை உரிமையாளர் படுகாயம்: வாலிபருக்கு வலைவீச்சு!

செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 8:10:22 PM (IST)

குரும்பூரில் பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கோழிக்கடை உரிமையாளர் படுகாயமடைந்த சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் முஸ்லிம் பெரிய தெருவைச் சேர்ந்தவர் செய்யது அகமது (46). இவர் அப்பகுதியில் கோழிக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் கடையிலிருந்து பஜாரை நோக்கித் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த மற்றொரு பைக், செய்யது அகமதுவின் பைக் மீது நேருக்கு நேர் மோதியது.

இவ்விபத்தில் நிலைகுலைந்து கீழே விழுந்த செய்யது அகமதுவுக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதோடு, உடலெங்கும் பலத்த காயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, உடனடியாக நாலுமாவடி பன்னோக்கு மிஷன் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் திருநெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் குறித்துக் குரும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், விபத்தை ஏற்படுத்திய பைக் ஓட்டி வந்தவர் குரும்பூர் புதுக்கிராமத்தைச் சேர்ந்த மாடசாமி என்பவரின் மகன் ஜெகன் (20) என்பது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள ஜெகனைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory