» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கடலுக்குச் சென்ற தூத்துக்குடி மீனவர் மாயம் : தேடும் பணித் தீவிரம்!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 4:52:58 PM (IST)
தருவைகுளத்திலிருந்து விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்றபோது கடலில் மாயமான தூத்துக்குடி மீனவரை கடலோரக் காவல் படையினர் மற்றும் மீனவர்கள் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளத்தைச் சேர்ந்த அந்தோணியார் பிச்சை என்பவருக்குச் சொந்தமான செவுள்வலை விசைப்படகில், நேற்று இரவு 9.00 மணியளவில் 10 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். கடலில் சென்று கொண்டிருந்தபோது, படகில் இருந்த தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த பனிமயராஜா என்பவரைக் காணவில்லை என்பதை சக மீனவர்கள் இரவு 10.30 மணியளவில் கண்டறிந்தனர்.இதுகுறித்து உடனடியாக விசைப்படகு உரிமையாளருக்கும், கடலோரக் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மாயமான மீனவர் பனிமயராஜாவைத் தேடும் பணியில் தற்போது 3 விசைப்படகுகளில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமைச்சர் வன்னி அரசிடம் பனை பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை மனு அளிப்பு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:54:57 PM (IST)

பாரதியார் வித்யாலயம் பள்ளியில் இருபெரும் விழா
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:50:20 PM (IST)

அரசு செய்திகளில் சைகை மொழிபெயர்ப்புத் திரையை பெரிதாக்க வேண்டும்: மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் வலியுறுத்தல்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 4:20:19 PM (IST)

டைல்ஸ் கல்லால் தாக்கி விவசாயி படுகொலை: தூத்துக்குடி அருகே பயங்கரம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:31:32 PM (IST)

தேவாலய கோபுர கான்கிரீட் சரிந்து விபத்து: 4பேர் உயிருடன் மீட்பு - தூத்துக்குடி அருகே பரபரப்பு
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:15:29 PM (IST)

க.சுப்பிரமணியபுரத்தில் செல்லியம்மன் கோவில் ஆடி கொடை விழா: முளைப்பாரி ஊர்வலம் கோலாகலம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:06:09 PM (IST)







