» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டியில் இலவச செயற்கைக் கை, கால் அளவீட்டு முகாம்: செப்.6-இல் நடைபெறுகிறது!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 3:08:14 PM (IST)
கோவில்பட்டியில் வருகிற செப்.6ஆம் தேதி இலவச செயற்கைக் கை, செயற்கைக் கால் மற்றும் இதர உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான அளவீட்டு முகாம் நடைபெறவுள்ளது.
கே.ஆர். குழுமம் & கல்வி நிறுவனங்கள் மற்றும் சென்னை ஃபிரீடம் டிரஸ்ட் இணைந்து நடத்தும் இலவச செயற்கைக் கை, செயற்கைக் கால் மற்றும் இதர உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான அளவீட்டு முகாம் கோவில்பட்டியில் நடைபெறவுள்ளது. கல்லூரி நிறுவனர், 'கல்வித் தந்தை' .ராமசாமி பிறந்தநாளை முன்னிட்டு இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்குச் செயற்கைக் கை, செயற்கைக் கால், சக்கர நாற்காலி, மூன்று சக்கர சைக்கிள், வாக்கர், ரோலேட்டர், சிறப்புக் குழந்தைகளுக்கான இருக்கை, நடைப்பயிற்சி மற்றும் நிற்கும் உபகரணங்கள், ஆர்த்தோசிஸ் (Orthosis) சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு மறுவாழ்வு உபகரணங்கள் அளவெடுக்கப்பட்டு, அக்டோபர் மாதம் மூன்றாவது வாரத்தில் இலவசமாக வழங்கப்படவுள்ளன.
முகாம் வருகிற செப்டம்பர் 06ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை)காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை, கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் வைத்து நடைபெறும்.
கொண்டு வர வேண்டிய ஆவணங்கள் (நகல்கள்): பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை, யுடிஐடி (UDID) அட்டை மற்றும் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை.
முன்பதிவு செய்ய 98433 28155, 95433 43502, 94448 85083, 93448 03795 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். வருகை தரும் பயனாளர்கள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்படும் எனக் கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமைச்சர் வன்னி அரசிடம் பனை பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை மனு அளிப்பு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:54:57 PM (IST)

பாரதியார் வித்யாலயம் பள்ளியில் இருபெரும் விழா
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:50:20 PM (IST)

அரசு செய்திகளில் சைகை மொழிபெயர்ப்புத் திரையை பெரிதாக்க வேண்டும்: மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் வலியுறுத்தல்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 4:20:19 PM (IST)

டைல்ஸ் கல்லால் தாக்கி விவசாயி படுகொலை: தூத்துக்குடி அருகே பயங்கரம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:31:32 PM (IST)

தேவாலய கோபுர கான்கிரீட் சரிந்து விபத்து: 4பேர் உயிருடன் மீட்பு - தூத்துக்குடி அருகே பரபரப்பு
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:15:29 PM (IST)

க.சுப்பிரமணியபுரத்தில் செல்லியம்மன் கோவில் ஆடி கொடை விழா: முளைப்பாரி ஊர்வலம் கோலாகலம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:06:09 PM (IST)







