» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக் மீது கார் மோதி விபத்து: இளைஞர் உயிரிழப்பு!

செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 12:34:08 PM (IST)

கயத்தாறு அருகே தேசிய நெடுஞ்சாலையில் பைக் மீது கார் மோதிய விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சாமி சன்னதி தெருவைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் பிச்சை ராகவன் (25). இவர் கடந்த 8-ஆம் தேதி மாலை திருநெல்வேலி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரசன்குளம் கிராம பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் அதிவேகமாக வந்த கார் ஒன்று இவரது இருசக்கர வாகனத்தின் மீது எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் படுகாயமடைந்த பிச்சை ராகவன், உடனடியாக மீட்கப்பட்டுத் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கயத்தாறு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory