» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தென் மண்டல கூடைப்பந்து போட்டி: தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக அணி சாம்பியன்!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 11:39:53 AM (IST)

தேனியில் நடைபெற்ற தென் மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டியில் தூத்துக்குடி வஉசி துறைமுக அணி சாம்பியன் பட்டத்தை வென்றது
தமிழ்நாடு மாநில கூடைப்பந்து சம்மேளனம் சார்பில் தென் மண்டல சீனியர் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மூன்று நாட்கள் நடந்தது. இப்போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 90 அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில், தேனி மாவட்ட அணியும் தூத்துக்குடி வஉசி துறைமுக அணியும் மோதின.
இந்தப் போட்டியில் 93-47 என்ற புள்ளிக் கணக்கில் வஉசி துறைமுக அணிவெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் தேனி எல்.எஸ் மில் அதிபர் பிரபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெண்ண அணிக்கு கோப்பையை வழங்கினார்.
சாம்பியன் பட்டம் வென்ற அணி வீரர்கள், மற்றும்பயிற்சியாளரும் துறைமுக சபை உறுப்பினருமான சத்யா ஆகியோருக்கு வஉசி துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த குமார் புரோகித், துணைத் தலைவர் ராஜேஷ் சவுந்தர்ராஜன் ஆகியோர் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமைச்சர் வன்னி அரசிடம் பனை பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை மனு அளிப்பு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:54:57 PM (IST)

பாரதியார் வித்யாலயம் பள்ளியில் இருபெரும் விழா
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:50:20 PM (IST)

அரசு செய்திகளில் சைகை மொழிபெயர்ப்புத் திரையை பெரிதாக்க வேண்டும்: மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் வலியுறுத்தல்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 4:20:19 PM (IST)

டைல்ஸ் கல்லால் தாக்கி விவசாயி படுகொலை: தூத்துக்குடி அருகே பயங்கரம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:31:32 PM (IST)

தேவாலய கோபுர கான்கிரீட் சரிந்து விபத்து: 4பேர் உயிருடன் மீட்பு - தூத்துக்குடி அருகே பரபரப்பு
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:15:29 PM (IST)

க.சுப்பிரமணியபுரத்தில் செல்லியம்மன் கோவில் ஆடி கொடை விழா: முளைப்பாரி ஊர்வலம் கோலாகலம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:06:09 PM (IST)







