» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வழக்கறிஞர் அதிசயகுமார் முதலாமாண்டு நினைவேந்தல் சிறப்புக் கூட்டம்!

செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 11:28:59 AM (IST)



தூத்துக்குடியில் பகுஜன் திராவிட கட்சி சார்பில், மனித உரிமைப் போராளியும் வழக்கறிஞருமான அதிசயகுமார் முதலாமாண்டு நினைவேந்தல் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. 

இவ்விழாவிற்கு பகுஜன் திராவிட கட்சியின் தேசியத் தலைவர் சர்தார் ஜீவன் சிங் தலைமை தாங்கினார். வழக்கமான சடங்குகளையும் சாஸ்திரங்களையும் முற்றிலுமாக மறுதலிக்கும் விதமாக இந்நிகழ்ச்சி மிகவும் புரட்சிகரமான முறையில் உணர்வுபூர்வமாக அனுசரிக்கப்பட்டது. மாநிலத் தலைவர் கொற்கை பழனி சிங் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தி அனைவரையும் வரவேற்றார்.

வழக்கமான சடங்கு முறையான மாலை அணிவித்தல் முழுமையாகத் தவிர்க்கப்பட்டது. வழக்கறிஞர் அதிசயகுமாரின் திருவுருவப்படம் பேனாக்களாலும், வாள்களாலும் அலங்கரிக்கப்பட்டது. மனித உரிமைகள் கழகத்தின் துணைத் தலைவர் ஏ.வி.லினோ பரதவர் மற்றும் காமராஜர் சமூக நீதி பேரவையைச் சேர்ந்த எம்.பாபு ஜீ ஆகியோர் படத்தின் திரையைத் திறந்து வைத்து மரியாதை செலுத்தினர்.

அர்ஜூனா விருது பெற்ற தேசிய கபடி வீரர் பைசன். மணத்தி கணேசன், வீராங்கனை அமைப்பு நிறுவனர் பாத்திமா பாபு, தூத்துக்குடி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் எஸ்.பி. வாரியார், நீதி அரசர் செந்தூர்பாண்டியன், வழக்கறிஞர் ராமசந்திரன் மற்றும் திராவிடர் கழகம், மீனவர் மக்கள் கட்சி, திராவிட விடுதலை கழகம், விசிக, நீர்வள நிலவள பாதுகாப்பு பேரவை, திராவிட தமிழர் கட்சி, டாக்டர் அம்பேத்கர் பணியாளர் மற்றும் பொறியாளர் சங்கம், அகில இந்திய மாவீரன் சுந்தரலிங்கனார் பேரவை உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் திரளாகக் கலந்து காெண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory