» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு : திரளான பக்தர்கள் தரிசனம்!

செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 10:57:16 AM (IST)

MeenakshiSundar.jpg

விளாத்திகுளத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ஆடி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்திகேஸ்வரர் மற்றும் மீனாட்சிசுந்தரேஸ்வரருக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், பன்னீர், சந்தனம், திருநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது. 

அதனைத்தொடர்ந்து செவ்வரளி, மல்லிகை,வில்வ இலை உள்ளிட்ட பல்வேறு வண்ண மலர்களால் மாலை அணிவிக்கப்பட்டது. பிரதோஷ ரிஷப வாகனத்தில் எழுந்தருளி சந்திரசேகரர் உமா மகேஸ்வரி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதனைத் தொடர்ந்து சிவ நாமத்துடன் நந்திகேஸ்வரர் மற்றும் மீனாட்சிசுந்தரேஸ்வரருக்கு பஞ்சமுக தீபாதாரனை காண்பிக்கப்பட்டது. இதில் விளாத்திகுளம் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory