» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
உடன்குடி அனல்மின் நிலையத்தில் விரைவில் வணிக மின் உற்பத்தி: டிசம்பரில் 2வது அலகு சோதனை!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 8:46:37 AM (IST)

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அனல்மின் நிலையத்தின் முதல் அலகில் இம்மாத இறுதியில் வணிக ரீதியிலான மின் உற்பத்தி தொடங்கப்படவுள்ள நிலையில், 2-வது அலகில் வரும் டிசம்பர் மாதம் சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளதாக மின்சார வாரிய உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு மின்சார உற்பத்தி கழகம் சார்பில் உடன்குடியில் ரூ. 13,077 கோடி மதிப்பீட்டில் தலா 660 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அலகுகளுடன் கூடிய மிக உயர் அனல்மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, கடந்த மார்ச் 13-ஆம் தேதி முதல் அலகுக்கான மின்சார உற்பத்தி சோதனை ஓட்டத்தை அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கடந்த 5 மாதங்களாக நடைபெற்று வந்த சோதனை ஓட்டம் தற்போது நிறைவடையும் கட்டத்தை எட்டியுள்ளது.
பொதுவாக 72 மணி நேரம் முழு கொள்ளளவில் மின் உற்பத்தி எட்டப்பட்டால் உடனடியாக வணிக ரீதியிலான உற்பத்திக்கு மாற்றப்படும். அந்த வகையில், இம்மாத இறுதியில் உடன்குடி முதல் அலகு வணிக உற்பத்தியைத் தொடங்கவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
டிசம்பரில் சோதனை ஓட்டம்: முதல் அலகில் வணிக உற்பத்தி தொடங்கப்படுவதைத் தொடர்ந்து, 2-வது அலகில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து வரும் டிசம்பர் மாதம் சோதனை ஓட்டம் தொடங்கப்படவுள்ளது. அடுத்த ஆண்டு (2027) தொடக்கத்தில் 2 அலகுகளும் முழுத் திறனில் செயல்படத் தொடங்கும்.
உடன்குடி வளாகத்தில் மேலும் 3 அலகுகளை நிறுவுவதற்கான விரிவாக்கப் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன. நிலக்கரி கொண்டு வருவதற்காகச் சிறப்பு கப்பல் தளமும், மூடிய கன்வேயர் அமைப்பும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 6.80 லட்சம் டன் கொள்ளளவு கொண்ட நிலக்கரி சேமிப்புத் தளங்களும், கடல் நீரைக் குடிநீராக மாற்றும் நன்னீர் உற்பத்தி இயந்திரங்களும் இங்கு நிறுவப்பட்டுள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமைச்சர் வன்னி அரசிடம் பனை பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை மனு அளிப்பு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:54:57 PM (IST)

பாரதியார் வித்யாலயம் பள்ளியில் இருபெரும் விழா
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:50:20 PM (IST)

அரசு செய்திகளில் சைகை மொழிபெயர்ப்புத் திரையை பெரிதாக்க வேண்டும்: மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் வலியுறுத்தல்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 4:20:19 PM (IST)

டைல்ஸ் கல்லால் தாக்கி விவசாயி படுகொலை: தூத்துக்குடி அருகே பயங்கரம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:31:32 PM (IST)

தேவாலய கோபுர கான்கிரீட் சரிந்து விபத்து: 4பேர் உயிருடன் மீட்பு - தூத்துக்குடி அருகே பரபரப்பு
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:15:29 PM (IST)

க.சுப்பிரமணியபுரத்தில் செல்லியம்மன் கோவில் ஆடி கொடை விழா: முளைப்பாரி ஊர்வலம் கோலாகலம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:06:09 PM (IST)







