» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அவை உரிமை மீறல் நடவடிக்கை: தி.மு.க. எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் சபாநாயகருக்குத் திடீர் கடிதம்!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 8:32:49 AM (IST)
சட்டமன்ற அவை உரிமை மீறல் நடவடிக்கைக்கு ஆளாகியுள்ள விளாத்திகுளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ஜி.வி. மார்க்கண்டேயன், பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகருக்குத் திடீரென கடிதம் ஒன்றை அளித்துள்ளார்.
முதல்வர் விஜய் குறித்துப் பொதுமேடையில் ஆவேசமாகப் பேசியது தொடர்பாக எழுந்த புகாரில், வழக்குப்பதிவு செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், பின்னர் ஜாமீனில் வெளிவந்து சட்டமன்ற நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார்.
கடந்த 7-ஆம் தேதி சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று அவர் பேசியபோது, முதல்வருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பேசியதாகக் கூறி அமைச்சர் நிர்மல்குமார் புகார் அளித்தார். அதனடிப்படையில், மார்க்கண்டேயன் மீது அவை உரிமைக்குழு விசாரணை நடத்தி முடிவெடுக்கும் எனச் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான எம்.எல்.ஏ.க்களின் விவாதம் நடைபெற்றபோது, கருத்து ஒன்றைப்பதிவு செய்ய அனுமதி கோரி சபாநாயகரிடம் மார்க்கண்டேயன் வாய்ப்பு கேட்டார்.
அதற்குப் பதிலளித்துப் பேசிய சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், "அவைக்குப் புறப்பட்டு வரும்போதுதான் என்னிடம் கடிதம் கொடுத்தீர்கள். அந்தக் கடிதத்தைப் படித்துப் பார்க்க வேண்டும்; மேலும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. எனவே, இப்போது நீங்கள் இங்கு எதுவும் பேச வேண்டாம்" என்று உத்தரவிட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமைச்சர் வன்னி அரசிடம் பனை பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை மனு அளிப்பு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:54:57 PM (IST)

பாரதியார் வித்யாலயம் பள்ளியில் இருபெரும் விழா
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:50:20 PM (IST)

அரசு செய்திகளில் சைகை மொழிபெயர்ப்புத் திரையை பெரிதாக்க வேண்டும்: மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் வலியுறுத்தல்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 4:20:19 PM (IST)

டைல்ஸ் கல்லால் தாக்கி விவசாயி படுகொலை: தூத்துக்குடி அருகே பயங்கரம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:31:32 PM (IST)

தேவாலய கோபுர கான்கிரீட் சரிந்து விபத்து: 4பேர் உயிருடன் மீட்பு - தூத்துக்குடி அருகே பரபரப்பு
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:15:29 PM (IST)

க.சுப்பிரமணியபுரத்தில் செல்லியம்மன் கோவில் ஆடி கொடை விழா: முளைப்பாரி ஊர்வலம் கோலாகலம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:06:09 PM (IST)







