» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கருகும் நிலையிலுள்ள பயிர்களைக் காப்பாற்ற விவசாயிகள் கோரிக்கை -ஆக.14ல் சாலை மறியல் எச்சரிக்கை!

திங்கள் 10, ஆகஸ்ட் 2026 4:22:02 PM (IST)



நீரின்றி கருகும் நிலையிலுள்ள வாழை மற்றும் வெற்றிலைப் பயிர்களைக் காப்பாற்ற ஸ்ரீவைகுண்டம் அணையின் வடகாலில் உடனடியாகத் தண்ணீர் திறக்கக் கோரி 20 கிராம விவசாயிகள் சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசன வாய்க்கால் மூலம் தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டம், வாழவல்லான் கீழூர், வாழவல்லான் மேலூர், தெற்கு வாழவல்லான், ஆறுமுகமங்களம், கொட்டாரகுறிச்சி, செல்வநாயகபுரம், கணபதி சமுத்திரம், அண்ணாநகர், அரசன்குளம், கொற்கை, கொற்கை கனி, அக்கசாலை, செந்நெல்மாநகர், கொற்கை மணலூர், லட்சுமிபுரம், அரியபுரம், அதிசயபுரம், உமரிக்காடு, முக்காணி, ஆடிஷயூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் ஆயிரம் ஏக்கரில் வாழை மற்றும் வெற்றிலை விவசாயம் நடைபெற்று வருகிறது.

தற்போது பல லட்சம் வாழை மரங்கள் குலை தள்ளும் பருவத்தில் உள்ளன. இச்சூழலில் பாசனத்திற்கு நீரின்றிப் பயிர்கள் கருகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதால், பழங்களின் தரம் குறைந்து மகசூல் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

ஸ்ரீவைகுண்டம் வடகாலில் இருந்து நாளை முதல் தொடர்ச்சியாக 15 நாட்களுக்கு நாளொன்றுக்குச் சுமார் 500 கன அடி தண்ணீர் திறந்துவிட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டும். தண்ணீர் திறக்கப்படாத பட்சத்தில், வரும் ஆகஸ்ட் 14 அன்று முக்காணி ரவுண்டானாவில் 20 ஊர் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் பிரம்மாண்ட சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory