» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கல்!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 3:46:29 PM (IST)

தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பயிலும் ஏழை மாணவ, மாணவியருக்கு உப்பு ஏற்றுமதி வியாபாரிகள் சங்கம் சார்பில் இலவச சீருடைகள் வழங்கப்பட்டன.
தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பயிலும் ஏழை மாணவ, மாணவியருக்குக் கடந்த கல்வியாண்டைப் போலவே, 2026-2027 ஆம் கல்வி ஆண்டிலும் இலவச சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்குப் பள்ளித் தலைமை ஆசிரியை எமெல்டா லெவன்சியா ஹெப்சிபா தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி தன்பாடு உப்பு ஏற்றுமதி வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு மாணவர்களுக்குச் சீருடைகளை வழங்கினர். இதில் சங்கத் தலைவர் பொன் பாண்டியன், செயலாளர் தேன்ராஜ், பொருளாளர் ரெங்கநாதன், துணைத் தலைவர்கள் ராமசாமி, நடராஜன், தணிக்கையாளர் ராகவன், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் தர்மராஜ் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமைச்சர் வன்னி அரசிடம் பனை பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை மனு அளிப்பு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:54:57 PM (IST)

பாரதியார் வித்யாலயம் பள்ளியில் இருபெரும் விழா
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:50:20 PM (IST)

அரசு செய்திகளில் சைகை மொழிபெயர்ப்புத் திரையை பெரிதாக்க வேண்டும்: மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் வலியுறுத்தல்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 4:20:19 PM (IST)

டைல்ஸ் கல்லால் தாக்கி விவசாயி படுகொலை: தூத்துக்குடி அருகே பயங்கரம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:31:32 PM (IST)

தேவாலய கோபுர கான்கிரீட் சரிந்து விபத்து: 4பேர் உயிருடன் மீட்பு - தூத்துக்குடி அருகே பரபரப்பு
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:15:29 PM (IST)

க.சுப்பிரமணியபுரத்தில் செல்லியம்மன் கோவில் ஆடி கொடை விழா: முளைப்பாரி ஊர்வலம் கோலாகலம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:06:09 PM (IST)







