» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மகளிர் சுயஉதவிக் குழு கடன் தள்ளுபடி முறைகேடு : வங்கி அதிகாரிகள் மீது பரபரப்பு புகார்!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 3:37:38 PM (IST)

மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான அரசு கடன் தள்ளுபடி அரசாணையை முறையாகச் செயல்படுத்தாமல் முறைகேடு செய்த கூட்டுறவு வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா, கோமாநேரி ஊராட்சி, கலுங்குவிளை கிராமத்தில் செயல்பட்டு வரும் 'இ.இ. 224 கலுங்குவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில்' தேன்மலர், பொன்மலர், செம்மலர், வசந்த நிலா, பிரியங்கா, நேதாஜி மற்றும் சாரோனின் ரோஜா ஆகிய மகளிர் சுயஉதவிக் குழுக்கள் இணைந்து கடன் பெற்றுச் செயல்பட்டு வருகின்றன.
கடந்த 2021 டிசம்பரில் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட மகளிர் சுயஉதவிக் குழு கடன் தள்ளுபடி அரசாணையை அடுத்து, குழு உறுப்பினர்களிடம் கடன் தொகை வசூலிக்கப்படவில்லை. கலுங்குவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் செயலாளர், அரசாணையை முறையாகச் செயல்படுத்தாமல் தனக்கு வேண்டிய நபர்களுக்கு மட்டும் கடன் தள்ளுபடி கிடைக்கும் வகையில் பயனாளிகளைத் தேர்வு செய்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார்.
தள்ளுபடி செய்யப்படாத கடன் தொகைகளுக்குக் கந்துவட்டி போல் வட்டி மற்றும் அபராத வட்டி விதித்து, வங்கி அதிகாரிகள் தினமும் வீட்டிற்கு வந்து மிரட்டி வருகின்றனர். மேலும், காவல்துறையின் மூலம் வீட்டின் பொருட்களை ஜப்தி செய்து விடுவதாகக் கூறி அச்சுறுத்தி வருகின்றனர்.
கடன் தள்ளுபடி அரசாணையை முறையாகச் செயல்படுத்தாமல் முறைகேடு செய்த வங்கிச் செயலாளர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த நபர்கள் மீது உரிய விசாரணை நடத்தித் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், சுயஉதவிக் குழுக்களுக்குரிய அசல், வட்டி மற்றும் அபராத வட்டி உள்ளிட்ட முழு கடன் தொகையையும் தள்ளுபடி செய்து தர வேண்டும் என்றும், மிரட்டல் விடுத்து வரும் வங்கி அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேன்மலர் மகளிர் சுயஉதவிக் குழு ஊ ஊக்குநர் புஷ்பவள்ளி மற்றும் குழு நிர்வாகிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமைச்சர் வன்னி அரசிடம் பனை பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை மனு அளிப்பு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:54:57 PM (IST)

பாரதியார் வித்யாலயம் பள்ளியில் இருபெரும் விழா
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:50:20 PM (IST)

அரசு செய்திகளில் சைகை மொழிபெயர்ப்புத் திரையை பெரிதாக்க வேண்டும்: மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் வலியுறுத்தல்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 4:20:19 PM (IST)

டைல்ஸ் கல்லால் தாக்கி விவசாயி படுகொலை: தூத்துக்குடி அருகே பயங்கரம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:31:32 PM (IST)

தேவாலய கோபுர கான்கிரீட் சரிந்து விபத்து: 4பேர் உயிருடன் மீட்பு - தூத்துக்குடி அருகே பரபரப்பு
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:15:29 PM (IST)

க.சுப்பிரமணியபுரத்தில் செல்லியம்மன் கோவில் ஆடி கொடை விழா: முளைப்பாரி ஊர்வலம் கோலாகலம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:06:09 PM (IST)







