» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை

திங்கள் 10, ஆகஸ்ட் 2026 3:20:37 PM (IST)



தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், ஏழை மாணவ, மாணவியருக்குக் கல்வி உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பித்த விளாத்திகுளம், கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம் ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு 'விஜயலட்சுமி - கதிர்வேல் சேரிட்டபிள் டிரஸ்ட்' நிதி உதவியுடன் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா கோவில்பட்டியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்குத் தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பெருமாள்சாமி தலைமை தாங்கி, தேர்வு செய்யப்பட்ட 25-க்கும் மேற்பட்ட பயனாளி மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை மற்றும் கற்றல் உபகரணங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் முக்கிய நிர்வாகிகள், வட்டாரத் தலைவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory