» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்திற்கும் தளிர் கீரைகள் வளர்ப்புத் திட்டம் வேண்டும்: முதலமைச்சருக்கு வேளாண் ஆர்வலர் மனு!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 3:10:41 PM (IST)

சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'தளிர் கீரைகள்' வளர்ப்புத் திட்டத்தை தூத்துக்குடி மாவட்டத்திற்கும் விரிவுபடுத்த வேண்டும் என இயற்கை உணவு ஆர்வலரும் எழுத்தாளருமான கோவில்பட்டி கோ. சுரேஷ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் மற்றும் வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் ஆர். வினோத் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது: முதிர்ந்த கீரைத் தாவரங்களைவிட அதிக ஊட்டச்சத்து அடர்த்தி கொண்டதும், விதைத்த 3 வாரங்களிலேயே அறுவடை செய்யக்கூடியதுமான 'தளிர் கீரைகள்' வளர்ப்பை ஊக்குவிக்கத் தமிழக அரசு ரூ.1.20 கோடி நிதியை ஒதுக்கி இத்திட்டத்தைத் தொடங்கியுள்ளது பாராட்டுக்குரியது. குறுகிய காலத்தில் உற்பத்தி, குறைந்த நிலப்பரப்பு மற்றும் குறைந்த நீர் பயன்பாடு மூலம் விவசாயிகளுக்கும் இளைஞர்களுக்கும் புதிய வருமான வாய்ப்பை உருவாக்கும் இத்திட்டத்திற்கு மனமார்ந்த நன்றிகள்.
தூத்துக்குடி மாவட்டம் வறண்ட மற்றும் குறைந்த நீர்வளம் கொண்ட பகுதிகளைக் கொண்டது. இத்தகைய சூழலில், குறைந்த இடத்திலும் கட்டுப்படுத்தப்பட்ட சூழலிலும் வளர்க்கக்கூடிய தளிர் கீரைகள், நகர்ப்புற மற்றும் கிராமப்புற இளைஞர்களுக்கும் சிறு விவசாயிகளுக்கும் சிறந்த தொழில்முனைவு வாய்ப்பை வழங்கும்.
தூத்துக்குடி மாவட்டத்திற்கு இத்திட்டத்தை விரிவுபடுத்தும்போது மாவட்ட அளவில் தளிர் கீரை பயிற்சி மற்றும் செயல்விளக்க மையம் அமைக்கப்பட வேண்டும். இளைஞர்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், சிறு விவசாயிகள் மற்றும் மாணவர்களுக்கு இலவச அல்லது மானியக் கட்டணத்தில் பயிற்சிகளும், தொழில் தொடங்க அரசு உதவிகளும் வழங்கப்பட வேண்டும்.
உற்பத்தி, தரக்கட்டுப்பாடு, பொதியிடுதல் மற்றும் சந்தைப்படுத்துதலை ஒருங்கிணைத்து இளம் தொழில்முனைவோருக்குச் சரியான சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும். குறைந்த நீர், குறுகிய காலம், அதிக மதிப்பு, ஆரோக்கியமான உணவு மற்றும் புதிய வேலைவாய்ப்பு ஆகியவற்றை ஒரே திட்டத்தின் மூலம் அடைந்து, தூத்துக்குடி மாவட்டத்தைச் சிறந்த "Microgreens மாவட்டமாக" மாற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமைச்சர் வன்னி அரசிடம் பனை பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை மனு அளிப்பு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:54:57 PM (IST)

பாரதியார் வித்யாலயம் பள்ளியில் இருபெரும் விழா
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:50:20 PM (IST)

அரசு செய்திகளில் சைகை மொழிபெயர்ப்புத் திரையை பெரிதாக்க வேண்டும்: மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் வலியுறுத்தல்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 4:20:19 PM (IST)

டைல்ஸ் கல்லால் தாக்கி விவசாயி படுகொலை: தூத்துக்குடி அருகே பயங்கரம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:31:32 PM (IST)

தேவாலய கோபுர கான்கிரீட் சரிந்து விபத்து: 4பேர் உயிருடன் மீட்பு - தூத்துக்குடி அருகே பரபரப்பு
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:15:29 PM (IST)

க.சுப்பிரமணியபுரத்தில் செல்லியம்மன் கோவில் ஆடி கொடை விழா: முளைப்பாரி ஊர்வலம் கோலாகலம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:06:09 PM (IST)







