» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஒய்யான்குடியில் தொழிலதிபர் சாமுவேலுக்கு பாராட்டு விழா
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 12:52:27 PM (IST)

நாசரேத் அருகிலுள்ள ஒய்யான்குடியை சேர்ந்த தொழிலதிபர் ஜான் சாமுவேல் டாக்டர் பட்டம் பெற்றதையொட்டி பாராட்டு விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகிலுள்ள ஒய்யான்குடியை சேர்ந்தவரும் தெலுங்கானா மாநில தொழிலதிபர் மற்றும் லே செயலாளருமான ஜான் சாமுவேல் சமூக சேவையை பாராட்டி அமெரிக்க தமிழ் பல்கலைக்கழக கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. இதையடுத்து தொழிலதிபர் டாக்டர் ஜான் சாமுவேலுக்கு அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் ஒய்யான்குடியில் பரி. திரித்துவ ஆலய சேகர குருவானவர் எஸ். கோவில்தாஸ் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஆலயத்தில் வைத்து சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி சிஎஸ்ஐ திருமண்டல பெருமன்ற உறுப்பினரும், டக்கரம்மாள்புரம் சிஎஸ்ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் மெட்ரிக் பள்ளி தாளாளருமான டாக்டர் தேவா கேபிரியேல் ஜெபராஜன், ஒய்யான்குடி பர்னபாஸ், சார்லஸ், சித்ரானந்த், விஜின் திருத்துவராஜ், தனசிங், ஏவான்ஸ், மருது தேவன், பிளெஸ்சன், மதுரை ஆத்திகுளம் சிஎஸ்ஐ சர்ச் திவாகர், தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல பெருமன்ற உறுப்பினர் எலிசபெத் சாமுவேல், நெல்லை ஈகிள் புக் சென்டர் உரிமையாளர் நியூட்டன், பெருமன்ற உறுப்பினர் எலிசபெத் சாமுவேல், நெல்லை ஈகிள் புக் சென்டர் உரிமையாளர் நியூட்டன், ஜெமி நியூட்டன் மற்றும் ஒய்யான்குடி திருச்சபை மக்கள் திரளாக கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை காட்டன் பிரபு செய்திருந்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமைச்சர் வன்னி அரசிடம் பனை பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை மனு அளிப்பு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:54:57 PM (IST)

பாரதியார் வித்யாலயம் பள்ளியில் இருபெரும் விழா
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:50:20 PM (IST)

அரசு செய்திகளில் சைகை மொழிபெயர்ப்புத் திரையை பெரிதாக்க வேண்டும்: மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் வலியுறுத்தல்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 4:20:19 PM (IST)

டைல்ஸ் கல்லால் தாக்கி விவசாயி படுகொலை: தூத்துக்குடி அருகே பயங்கரம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:31:32 PM (IST)

தேவாலய கோபுர கான்கிரீட் சரிந்து விபத்து: 4பேர் உயிருடன் மீட்பு - தூத்துக்குடி அருகே பரபரப்பு
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:15:29 PM (IST)

க.சுப்பிரமணியபுரத்தில் செல்லியம்மன் கோவில் ஆடி கொடை விழா: முளைப்பாரி ஊர்வலம் கோலாகலம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:06:09 PM (IST)







