» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் புதிய போக்குவரத்து காவல் மையம் : எஸ்.பி. சிவபிரசாத் தொடங்கி வைத்தார்!

திங்கள் 10, ஆகஸ்ட் 2026 12:46:56 PM (IST)



தூத்துக்குடியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்தைச் சீரமைக்கும் நோக்கில், குரூஸ் பர்னாந்து சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள புதிய மாநகரப் போக்குவரத்து காவல் மையத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாநகரில் போக்குவரத்தைச் சீரமைக்கக் காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக குரூஸ் பர்னாந்து சிலை அருகே புதிய போக்குவரத்து காவல் மையம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்குத் தூத்துக்குடி நகரக் காவல் துணை கண்காணிப்பாளர் சுனில் தலைமை தாங்கினார். போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுனை முருகன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத், புதிய போக்குவரத்து காவல் மையத்தைத் திறந்து வைத்துப் பேசினார். தொடர்ந்து, ஒலிபெருக்கி மூலமாகப் பொதுமக்களுக்குப் போக்குவரத்து விதிகள் குறித்தும், சாலைப் பாதுகாப்பு குறித்தும் அறிவுரைகளை வழங்கினார். மேலும், பணியில் உள்ள போக்குவரத்து காவலர்களுக்குத் தலைக்கவசங்களை  வழங்கிப் பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில் வேலவன் ஹைப்பர் மார்க்கெட் இயக்குநர் ஆனந்த், வட்டத் தெப்பம் வியாபாரிகள் சங்கத் தலைவர் சரவணமூர்த்தி, செயலாளர் ராஜேஷ், பொருளாளர் சரவணன், மத்திய வியாபாரிகள் சங்கப் பிரதிநிதி எம். உதயசூரியன் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து

BabuAug 11, 2026 - 06:25:01 PM | Posted IP 162.1*****

katchi kodi katitu pathavaila irupanuga 4 hor matitu ivanuga appan potta road mathiri vegama pornuga ivnugala nenga nipati visarikama vitalum pravala atleast number vachu fine okodava poda kodathu

மக்களில் ஒருவன்Aug 10, 2026 - 07:12:07 PM | Posted IP 104.2*****

ஆட்டோகளில் முன்பக்கத்தில் பம்பர் மாட்டி அதில் அதிகமாக ஒலி மற்றும் ஒளி எழுப்ப கூடிய ஹார்ன் மற்றும் விளக்கு காது மற்றும் கண் பாதிக்கும் வகையில் பயன்படுத்தி வருகின்றனர்.இது போலிசாரின் கண்களுக்கு தெரிவதில்லை. தலை கவசம் மட்டும் தான் இவர்களின் கண்களுக்கு தெரியும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory