» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மத்திய அரசைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் சாலை மறியல்: 774 பேர் பேர் கைது!

திங்கள் 10, ஆகஸ்ட் 2026 12:35:59 PM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மத்திய அரசைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் 223 பெண்கள் உள்பட 774 பேர் கைது செய்யப்பட்டனர். 

தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் வாழ்வாதாரத்தின் மீதான தாக்குதல், தேர்வு மோசடிகளைக் கண்டித்தும், வேலைவாய்ப்புகளை உருவாக்கக் கோரியும் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பு அனைத்துத் தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய அமைப்புகள் சார்பில் மத்திய அரசைக் கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.இப்போராட்டத்திற்கு ஐ.என்.டி.யு.சி. மாநிலச் செயல் தலைவர் பி. கதிர்வேல் தலைமை தாங்கினார். 

இப்போராட்டத்தில் ஐ.என்.டி.யு.சி. சார்பில் ராஜகோபால், மைக்கேல் வி. ராயன், சந்திரசேகர் மற்றும் பாலராஜ், சி.ஐ.டி.யு. சார்பில் முன்னாள் துறைமுகக் குழு உறுப்பினர் ரசல், பாலசுப்பிரமணியன், சிவபெருமாள், எச்.எம்.எஸ். சார்பில் மாவட்டத் தலைவர் ராஜலட்சுமி, துணைத் தலைவர் ராதா ஆனந்தராஜ், ராஜேஷ், சாதிக், ஏ.ஐ.சி.சி.டி.யு. சார்பில் சகாயம், சிவராமன், ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் சுப்பிரமணியன், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஞானசேகரன், மாநகராட்சி கவுன்சிலர் தனலட்சுமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் முத்து உட்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர். 

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பியவாறு, நடுரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதையடுத்து மத்திய பாகம் காவல் ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் இப்போராட்டத்தில் ஈடுபட்ட 13 பெண்கள் உட்பட மொத்தம் 79 பேரை கைது செய்து, அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். 

இதுபோல் திருச்செந்தூரில் நடந்த மறியல் போராட்டத்தில் 80 பெண்கள் உட்பட 180 பேரும், கோவில்பட்டியில் 55 பெண்கள் உள்பட 120 பேரும், செய்துங்கநல்லூரில் 20 பெண்கள் உள்பட 31 பேரும், ஸ்ரீவைகுண்டத்தில் 40 பெண்கள் உட்பட 80 பேரும், விளாத்திகுளத்தில் 25 பெண்கள் உட்பட 60 பேரும் என மாவட்டம் முழுவதும் 223 பெண்கள் உள்பட மொத்தம் 774 பேர் கைது செய்யப்பட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory