» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அருகே வாகன விபத்தில் முதியவர் பலி
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 12:27:25 PM (IST)
தூத்துக்குடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்த முதியவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கே. சுப்பிரமணியபுரம், மேல செய்தலை அஞ்சல் பகுதியைச் சேர்ந்தவர் அய்யாவு (63). இவர் தனது இருசக்கர வாகனத்தில் விளாத்திகுளம் சென்றுவிட்டு மீண்டும் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பட்டாசு கடை அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த காரைக் கண்டு எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி வாகனத்துடன் கீழே விழுந்தார்.
இவ்விபத்தில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டுத் தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாகச் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஒட்டப்பிடாரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமைச்சர் வன்னி அரசிடம் பனை பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை மனு அளிப்பு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:54:57 PM (IST)

பாரதியார் வித்யாலயம் பள்ளியில் இருபெரும் விழா
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:50:20 PM (IST)

அரசு செய்திகளில் சைகை மொழிபெயர்ப்புத் திரையை பெரிதாக்க வேண்டும்: மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் வலியுறுத்தல்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 4:20:19 PM (IST)

டைல்ஸ் கல்லால் தாக்கி விவசாயி படுகொலை: தூத்துக்குடி அருகே பயங்கரம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:31:32 PM (IST)

தேவாலய கோபுர கான்கிரீட் சரிந்து விபத்து: 4பேர் உயிருடன் மீட்பு - தூத்துக்குடி அருகே பரபரப்பு
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:15:29 PM (IST)

க.சுப்பிரமணியபுரத்தில் செல்லியம்மன் கோவில் ஆடி கொடை விழா: முளைப்பாரி ஊர்வலம் கோலாகலம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:06:09 PM (IST)







