» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விளாத்திகுளத்தில் புதிய அரசுப் பேருந்து சேவைகள் : அமைச்சர் பெ. மதன்ராஜா தொடங்கி வைத்தார்!

திங்கள் 10, ஆகஸ்ட் 2026 10:23:17 AM (IST)



விளாத்திகுளத்தில் புதிய அரசுப் பேருந்து சேவைகளை அமைச்சர் பெ. மதன்ராஜா தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையத்தில் இருந்து நாகலாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வழியாகச் செல்லும் புதிய பேருந்து சேவைகளை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ. மதன்ராஜா தொடங்கி வைத்தார்.

விளாத்திகுளம் பேருந்து நிலையத்தில் இருந்து நாகலாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வழித்தடத்தில் ஏற்கனவே 3 முறை பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது கூடுதலாக 2 சேவைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன:

வழித்தட எண் 71A: காலை 9:25 மணிக்குத் தவசலிங்கபுரத்தில் இருந்து புறப்பட்டு, நாகலாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வழியாக விளாத்திகுளம் பேருந்து நிலையம் சென்றடையும்.

வழித்தட எண் 74A: மாலை 3:50 (15:50) மணிக்கு விளாத்திகுளத்தில் இருந்து புறப்பட்டு, நாகலாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வழியாகக் கந்தசாமிபுரம் சென்றடையும்.

இப்புதிய பேருந்து சேவைகள் மூலம் நாகலாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகளும், அப்பகுதிப் பொதுமக்களும் பெரும் பயன்பெறுவர்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக (தூத்துக்குடி மண்டலம்) பொது மேலாளர் ராமகிருஷ்ணன், துணை மேலாளர் (வணிகம்) சண்முகம், விளாத்திகுளம் கோட்ட மேலாளர் மாடசாமி, விளாத்திகுளம் வட்டாட்சியர் கண்ணன், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory