» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழ்ச் சங்கமம் விருது வழங்கும் விழா: 220 கல்லூரி மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கல்!

திங்கள் 10, ஆகஸ்ட் 2026 8:43:02 AM (IST)



காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பல்வேறு துறைகளில் சாதனை படைத்த சாதனையாளர்களைக் கௌரவிக்கும் வகையில் தமிழ்ச் சங்கமம் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவிற்குக் கல்லூரித் தலைவர் செய்யிது அப்துர் ரஹ்மான் தலைமை தாங்கினார். கல்லூரிச் செயலாளர் மொகுதஸீம், துணைச்செயலாளர் அகமது இஸ்ராக், தூத்துக்குடி துளசி சோசியல் டிரஸ்ட் இயக்குநர் தனலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்ச் சங்கமம் விருதுகள் அறக்கட்டளையின் நிறுவனர் தாமோதரன் வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் ரஹ்மத் அமீனா பேகம் தொடக்க உரையாற்றினார். சிறந்த எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், படைப்பாளர்கள், கல்வியாளர்கள், சமூக சேவகர்கள், சுய தொழில்முனைவோர், மருத்துவர்கள் மற்றும் பசுமையாளர்களைக் கௌரவிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்பட்டன.

214 அதிகாரங்கள், 2,140 குறள் வெண்பா படைத்த தமிழ்ச் சங்கத்தின் தலைவர் சுகந்தீனா சிறப்புரையாற்றி, சாதனையாளர்களான பிரகாஷ்குமார், கலைவாணன், யோகேஸ்ராஜ், காமராஜ், வெள்ளைச்சாமி, மலைப்பாண்டி, முனைவர் சஜிதா, அய்யர், சுரபி செல்வராஜ், சாமுவேல் டேவிட், முனைவர் பிரபு மாறச்சன், முத்துக்குமார், மரிய குசேலன், நாஞ்சில் விஷ்ணு, ஜெசி, லதா, கீதா, முன்னாள் யூனியன் சேர்மன் சாந்தினி பகவதியப்பன், ஓட்டப்பந்தய வீராங்கனை மேரி ஜாய், முனைவர் யோஸ்வா, கில்பர்ட் தாஸ், மேரி, சிவகுமார், சங்கர், முத்துமாரி, வனிதா, பத்மா, தனலெட்சுமி, ஜெயக்கனி, ரோஸ்மேரி ஆகியோருக்கு விருதுகளை வழங்கிப் பாராட்டினார்.

மேலும், இயற்கையைப் பாதுகாத்துப் பசுமைப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்ட கல்லூரியைச் சேர்ந்த 220 மாணவிகளுக்கு 'பசுமை இளம் துளிர்' என்ற பெயர் சூட்டிச் சான்றிதழ்களையும் வழங்கினார். நிகழ்ச்சியில் சாதனை படைத்த சுகந்தீனாவுக்குக் 'குறளமுத பேரரசி' என்னும் மாபெரும் விருது வழங்கிப் பெருமைப்படுத்தப்பட்டது.

பட்டிமன்றப் பேச்சாளர் திவ்யபாரதி, சுரபி செல்வராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிறைவாக இளங்கலைத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சத்தியபாமா நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory