» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பாரா மெடிக்கல் லேப் சங்கம் ஆலோசனைக் கூட்டம்: ஆக. 23-ல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 8:33:18 AM (IST)

லேப் பரிசோதனை செய்யும் உரிமையைப் பறிக்கும் வகையிலுள்ள அரசாணையை எதிர்த்து சென்னையில் ஆக. 23-ல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த பாரா மெடிக்கல் லேப் சங்கம் முடிவு செய்துள்ளது.
பாரா மெடிக்கல் லேப்-கல்வி மற்றும் நலச்சங்கம் சார்பில் தூத்துக்குடி சௌபாக்கியா டவரில் வைத்து மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் கே.ஆர். சீனிவாசன் தலைமை தாங்கினார். தூத்துக்குடி வடக்கு மாவட்டத் தலைவர் கணேசன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மாவட்டச் செயலாளர் ரவீந்திரன் கூட்டத்தின் நோக்க உரையாற்றினார்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட பாரா மெடிக்கல் லேப்-கல்வி மற்றும் நலச்சங்க அகில இந்தியத் தலைவர் கா. காளிதாசன் பேசியதாவது: "லேப் பரிசோதனை செய்யும் நமது உரிமையைப் பறிக்கும் வகையிலுள்ள அரசாணை எண் 41/2006-இல் உரிய மாற்றங்களைச் செய்யக் கோரி, வரும் ஆகஸ்ட் 23 (2026) அன்று சென்னையில் அரசு கவன ஈர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது.
தமிழக அரசு இந்த அரசாணையில் உடனடியாக மாற்றம் கொண்டு வர வேண்டும். இப்போராட்டத்தில் தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து லேப் உரிமையாளர்களும், லேப் டெக்னீசியன்களும் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டும்." என்றார்.
இந்நிகழ்வில் மாநிலத் துணைச்செயலாளர் பாலாஜி (விழுப்புரம்), தேனி மாவட்டச் செயலாளர் சுந்தர், திருநெல்வேலி மாவட்டத் தலைவர் மாரியப்பன், மாநில மகளிர் அணி அமைப்பாளர் கலா காளிதாசன் மற்றும் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து லேப் உரிமையாளர்கள், டெக்னீசியன்கள் திரளாகக் கலந்துகொண்டனர். நிறைவாக மாவட்டப் பொருளாளர் திருமலை குமார் நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமைச்சர் வன்னி அரசிடம் பனை பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை மனு அளிப்பு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:54:57 PM (IST)

பாரதியார் வித்யாலயம் பள்ளியில் இருபெரும் விழா
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:50:20 PM (IST)

அரசு செய்திகளில் சைகை மொழிபெயர்ப்புத் திரையை பெரிதாக்க வேண்டும்: மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் வலியுறுத்தல்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 4:20:19 PM (IST)

டைல்ஸ் கல்லால் தாக்கி விவசாயி படுகொலை: தூத்துக்குடி அருகே பயங்கரம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:31:32 PM (IST)

தேவாலய கோபுர கான்கிரீட் சரிந்து விபத்து: 4பேர் உயிருடன் மீட்பு - தூத்துக்குடி அருகே பரபரப்பு
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:15:29 PM (IST)

க.சுப்பிரமணியபுரத்தில் செல்லியம்மன் கோவில் ஆடி கொடை விழா: முளைப்பாரி ஊர்வலம் கோலாகலம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:06:09 PM (IST)







