» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்: மாவட்ட அளவில் செப்டம்பா் முதல் வாரம் தொடக்கம்
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 8:00:13 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள், செப்டம்பா் முதல் வாரத்தில் மாவட்ட அளவில் தொடங்கப்படவுள்ளன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆண்டுதோறும் முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை தமிழகம் முழுவதும் மாவட்ட, மண்டல, மாநில அளவில் நடத்தி வருகிறது. நிகழாண்டுக்கான இப்போட்டிகள் வருகிற செப்டம்பா் மாதம் முதல் வாரத்தில் மாவட்ட அளவில் தொடங்கப்படவுள்ளது.
இதில் பங்குகொள்ள ஆா்வமுள்ளோா் ஆக. 6 முதல் 31ஆம் தேதி வரை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்ட 38 வகையான விளையாட்டுப் போட்டிகளுடன், நிகழாண்டு முதல் வில்வித்தை, வுஷு, துப்பாக்கிச் சுடுதல், யோகா, மல்லா் கம்பம், ஸ்பீடு ஸ்கேட்டிங், நீா் விளையாட்டுகளான கயாக்யிங், கேனோயிங் போன்றபுதிய விளையாட்டுகளும் சோ்க்கப்பட்டு மொத்தம் 45 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.
இப்போட்டிகள் வருகிற செப்டம்பா் முதல் அக்டோபா் வரை நடைபெறும். இதில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் 19 வயதுக்குள்பட்ட மாணவா், மாணவிகள் (1.1.2008 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்திருக்க வேண்டும்), இளங்கலை முதலாம் ஆண்டு முதல் முதுகலை இரண்டாம் ஆண்டு, பாலிடெக்னிக், பொறியியல் மற்றும் மருத்துவம் படிக்கும் மாணவா், மாணவிகள் (1.7.2001 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்திருக்க வேண்டும்), பொதுப்பிரிவினா் (15 வயது முதல் 35 வயது வரை), அனைத்து வயது மாற்றுத் திறனாளிகள், தமிழக அரசின் நிரந்தரப் பணியாளா்கள் பங்கேற்கலாம்.
மாவட்டம் மற்றும் மண்டல அளவில் தனிநபா் போட்டிகளில் வெற்றி பெறுபவா்களுக்கு முதல் பரிசாக ரூ. 3,000, இரண்டாம் பரிசாக ரூ. 2,000, மூன்றாம் பரிசாக ரூ. 1,000 வழங்கப்படும். மாநில அளவில் தனிநபா் போட்டிகளில் வெற்றி பெறுபவா்களுக்கு முதல் பரிசாக ரூ. 1,00,000, இரண்டாம் பரிசாக ரூ . 75,000, மூன்றாம் பரிசாக ரூ. 50,000 வழங்கப்படும்.
குழு போட்டிகளில் வெற்றி பெறுபவா்களுக்கு முதல் பரிசாக தலா ரூ. 75,000, இரண்டாம் பரிசாக தலா ரூ. 50,000, மூன்றாம் பரிசாக தலா ரூ. 25,000 வழங்கப்பட உள்ளது. இணையதளம் மூலம் பதிவு செய்தவா்கள் மட்டுமே போட்டிகளில் பங்கேற்க முடியும். மேலும், விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 74017 03508 , 0461 2321149 என்ற தொலைபேசி எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமைச்சர் வன்னி அரசிடம் பனை பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை மனு அளிப்பு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:54:57 PM (IST)

பாரதியார் வித்யாலயம் பள்ளியில் இருபெரும் விழா
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:50:20 PM (IST)

அரசு செய்திகளில் சைகை மொழிபெயர்ப்புத் திரையை பெரிதாக்க வேண்டும்: மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் வலியுறுத்தல்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 4:20:19 PM (IST)

டைல்ஸ் கல்லால் தாக்கி விவசாயி படுகொலை: தூத்துக்குடி அருகே பயங்கரம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:31:32 PM (IST)

தேவாலய கோபுர கான்கிரீட் சரிந்து விபத்து: 4பேர் உயிருடன் மீட்பு - தூத்துக்குடி அருகே பரபரப்பு
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:15:29 PM (IST)

க.சுப்பிரமணியபுரத்தில் செல்லியம்மன் கோவில் ஆடி கொடை விழா: முளைப்பாரி ஊர்வலம் கோலாகலம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:06:09 PM (IST)







