» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பைக்கில் வந்து ஆடு திருட்டு: சிசிடிவி காட்சி மூலம் இருவருக்குப் போலீசார் வலைவீச்சு!

திங்கள் 10, ஆகஸ்ட் 2026 7:51:02 AM (IST)

தூத்துக்குடியில் பகல் நேரத்தில் ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் பைக்கில் வந்து ஆட்டைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி முத்தம்மாள் காலனி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே, பகல் நேரத்தில் மேய்ச்சலுக்காக ஆடு ஒன்று நின்றுகொண்டிருந்தது. அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரு மர்ம நபர்கள், கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்த ஆட்டைத் தூக்கிக் கொண்டு பைக்கில் தப்பிச் சென்றனர்.

அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பான காட்சிகள் பதிவாகியிருந்தன. இதுகுறித்து ஆட்டின் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில், தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையப் பகுதிப் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆட்டைத் திருடிச் சென்ற மர்ம நபர்களைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory