» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குடும்பத்தைப் பிரிந்த ஏக்கத்தில் உப்பளத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை: தூத்துக்குடியில் சோகம்!
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 8:42:36 PM (IST)
தூத்துக்குடியில் குடும்பத்தைப் பிரிந்த ஏக்கத்தில் உப்பளத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
தூத்துக்குடி முத்தையாபுரம் சூசை நகரைச் சேர்ந்தவர் ஜோசப் மகன் அந்தோணி கிளாட்வின் (45). உப்பளத் தொழிலாளியான இவருக்குத் திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். அந்தோணி கிளாட்வின் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி தனது இரண்டு குழந்தைகளுடன் இவரைப் பிரிந்து சென்னைக்குச் சென்றுவிட்டார்.
மனைவி மற்றும் குழந்தைகளைப் பிரிந்த ஏக்கத்தில் கடந்த சில ஆண்டுகளாக அந்தோணி கிளாட்வின் கடும் மன அழுத்தத்தில் இருந்துவந்துள்ளார். பலமுறை தனது மனைவியைக் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தும் அவர் வர மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அந்தோணி கிளாட்வின், தனது வீட்டில் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த முத்தையாபுரம் காவல் நிலையப் பகுதியினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அவரது உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமைச்சர் வன்னி அரசிடம் பனை பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை மனு அளிப்பு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:54:57 PM (IST)

பாரதியார் வித்யாலயம் பள்ளியில் இருபெரும் விழா
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:50:20 PM (IST)

அரசு செய்திகளில் சைகை மொழிபெயர்ப்புத் திரையை பெரிதாக்க வேண்டும்: மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் வலியுறுத்தல்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 4:20:19 PM (IST)

டைல்ஸ் கல்லால் தாக்கி விவசாயி படுகொலை: தூத்துக்குடி அருகே பயங்கரம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:31:32 PM (IST)

தேவாலய கோபுர கான்கிரீட் சரிந்து விபத்து: 4பேர் உயிருடன் மீட்பு - தூத்துக்குடி அருகே பரபரப்பு
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:15:29 PM (IST)

க.சுப்பிரமணியபுரத்தில் செல்லியம்மன் கோவில் ஆடி கொடை விழா: முளைப்பாரி ஊர்வலம் கோலாகலம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:06:09 PM (IST)







