» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக பேரணி : காங்கிரஸ் கட்சியினர் திரளாக பங்கேற்பு
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 5:33:56 PM (IST)

நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறையைக் கண்டித்தும், 'ரீஜெக்ட் மோடி லிமிடேஷன்' என்ற முழக்கத்தை வலியுறுத்தியும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று கோவில்பட்டியில் அமைதிப் பேரணி நடைபெற்றது.
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் 9ஆம் தேதி விழிப்புணர்வு பேரணி நடைபெறும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் அறிவித்துள்ளார். அதன்படி தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கோவில்பட்டி காமராஜர் சிலை முன்பிருந்து காலை 10:30 மணிக்குத் தொடங்கி, முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கோவில்பட்டி காந்தி மண்டபத்தை அடைந்தது.
அங்குள்ள காந்தி சிலைக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதைத் தொடர்ந்து பேரணி நிறைவடைந்தது. இப்போராட்டத்திற்குத் தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே. பெருமாள்சாமி தலைமை தாங்கி, பேரணியைத் தொடங்கி வைத்தார். நகரத் தலைவர் கே.டி.பி. அருண்பாண்டியன், வட்டாரத் தலைவர் சி. ரமேஷ் மூர்த்தி மற்றும் மாவட்டப் பொருளாளர் ராஜாராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்டத் துணைத் தலைவர்கள் பெத்துராஜ், செல்லதுரை, ஐ.என்.டி.யு.சி. பொதுச்செயலாளர் ராஜாசேகரன், மேடை சேர்மன், பி.சி.சி. உறுப்பினர் மகேஷ்குமார், வழக்கறிஞர் கருப்பசாமிபாண்டியன், வர்த்தக அணித் தலைவர் எஸ்.எம்.டி. ராஜா, விவசாய அணித் தலைவர் பேரையா, இளைஞர் காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் அரவிந்த், சூப்பராயிலு ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் வட்டார மற்றும் நகரத் தலைவர்கள் விஜய் (ஓட்டப்பிடாரம் மேற்கு), ஞானராஜ் (விளாத்திகுளம் நகரம்), ஏ. ரவி (கருங்குளம்), மரியசூசைராஜ் (கோவில்பட்டி கிழக்கு), கே.ஆர். வேல்சாமி (புதூர் கிழக்கு), முத்துகிருஷ்ணன் (கழுகுமலை), போத்திராஜ் (விளாத்திகுளம் மத்திய), சுரேஷ் (விளாத்திகுளம் மேற்கு), ஞானராஜ் (விளாத்திகுளம் கிழக்கு), தியாகராஜன் (புது நகரம்) உள்ளிட்ட திரளான காங்கிரஸ் நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமைச்சர் வன்னி அரசிடம் பனை பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை மனு அளிப்பு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:54:57 PM (IST)

பாரதியார் வித்யாலயம் பள்ளியில் இருபெரும் விழா
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:50:20 PM (IST)

அரசு செய்திகளில் சைகை மொழிபெயர்ப்புத் திரையை பெரிதாக்க வேண்டும்: மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் வலியுறுத்தல்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 4:20:19 PM (IST)

டைல்ஸ் கல்லால் தாக்கி விவசாயி படுகொலை: தூத்துக்குடி அருகே பயங்கரம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:31:32 PM (IST)

தேவாலய கோபுர கான்கிரீட் சரிந்து விபத்து: 4பேர் உயிருடன் மீட்பு - தூத்துக்குடி அருகே பரபரப்பு
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:15:29 PM (IST)

க.சுப்பிரமணியபுரத்தில் செல்லியம்மன் கோவில் ஆடி கொடை விழா: முளைப்பாரி ஊர்வலம் கோலாகலம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:06:09 PM (IST)







