» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஆடி அமாவாசை திருவிழா: 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 5:30:15 PM (IST)
காரையாறு சொரிமுத்தையனார் கோயில் மற்றும் ஏரல் சேர்மன் கோயில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
காரையாறு அருள்மிகு ஸ்ரீ சொரிமுத்தையனார் திருக்கோயில் மற்றும் ஏரல் அருள்மிகு ஸ்ரீ சேர்மன் அருணாசல சுவாமிகள் திருக்கோயில் ஆகியவற்றின் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காகப் பல்வேறு ஊர்களில் இருந்து மொத்தம் 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி மண்டல நிர்வாக இயக்குநர் க. செல்வம் தெரிவித்துள்ளார்.
காரையாறு ஸ்ரீ சொரிமுத்தையனார் திருக்கோயில் ஆடி அமாவாசை திருவிழா வரும் 12.08.2026 அன்று நடைபெறுவதை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக 10.08.2026 முதல் 14.08.2026 வரை திருநெல்வேலி, ஆலங்குளம், சுரண்டை, தென்காசி, அம்பாசமுத்திரம், அகஸ்தியார்பட்டி ஆகிய இடங்களிலிருந்து 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
ஏரல் ஸ்ரீ சேர்மன் அருணாசல சுவாமிகள் திருக்கோயில் ஆடி அமாவாசைத் திருவிழாவை (12.08.2026) முன்னிட்டு, 11.08.2026 முதல் 13.08.2026 வரை திருநெல்வேலி, திருவைவைகுண்டம், தூத்துக்குடி, திருச்செந்தூர் ஆகிய ஊர்களில் இருந்து ஏரலுக்கு மொத்தம் 50 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். இந்தச் சிறப்புப் பேருந்து வசதிகளைப் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமைச்சர் வன்னி அரசிடம் பனை பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை மனு அளிப்பு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:54:57 PM (IST)

பாரதியார் வித்யாலயம் பள்ளியில் இருபெரும் விழா
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:50:20 PM (IST)

அரசு செய்திகளில் சைகை மொழிபெயர்ப்புத் திரையை பெரிதாக்க வேண்டும்: மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் வலியுறுத்தல்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 4:20:19 PM (IST)

டைல்ஸ் கல்லால் தாக்கி விவசாயி படுகொலை: தூத்துக்குடி அருகே பயங்கரம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:31:32 PM (IST)

தேவாலய கோபுர கான்கிரீட் சரிந்து விபத்து: 4பேர் உயிருடன் மீட்பு - தூத்துக்குடி அருகே பரபரப்பு
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:15:29 PM (IST)

க.சுப்பிரமணியபுரத்தில் செல்லியம்மன் கோவில் ஆடி கொடை விழா: முளைப்பாரி ஊர்வலம் கோலாகலம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:06:09 PM (IST)







