» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விளாத்திகுளத்தில் மாபெரும் மாட்டுவண்டி எல்கைப் பந்தயம்: 58 ஜோடி மாடுகள் சீறிப்பாய்ந்தன!

ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 1:37:00 PM (IST)



விளாத்திகுளத்தில் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் மாட்டுவண்டி எல்கைப் பந்தயத்தில் 58 ஜோடி மாடுகள் சீறிப்பாய்ந்தன.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் கேசவன் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ நாகாரப்பன், ஸ்ரீ நாகம்மாள், ஸ்ரீ கருப்பசாமி, ஸ்ரீ செல்வவிநாயகர் திருக்கோவில் ஆடி மாதக் கொடை விழாவை முன்னிட்டு, மாபெரும் இரண்டாம் ஆண்டு மாட்டுவண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது.

விளாத்திகுளம் - வேம்பார் சாலையில் நடைபெற்ற இப்போட்டிகள் பூஞ்சிட்டு மற்றும் தேன்சிட்டு என இரு பிரிவுகளாக நடத்தப்பட்டன. பூஞ்சிட்டு மாட்டுவண்டி பந்தயத்திற்குப் போய் வர 5 மைல் தூரமும், தேன்சிட்டு பந்தயத்திற்கு 4 மைல் தூரமும் எல்கையாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இப்போட்டியில் திருநெல்வேலி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 58 ஜோடி மாடுகள் கலந்துகொண்டு இலக்கை நோக்கிச் சீறிப்பாய்ந்தன. சாலையின் இருபுறமும் திரண்டிருந்த ஏராளமான பொதுமக்களும் பந்தய ரசிகர்களும் போட்டியை மிகுந்த ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும், வண்டியைச் திறம்பட ஓட்டி வந்த சாரதிகளுக்கும் விழா கமிட்டியின் சார்பில் ரொக்கப் பரிசும் வெற்றிக் கோப்பைகளும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வை திமுக மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு, தொழிலதிபர் காண்டீபன், தமிழக ஏர் உழவன் அனைத்து விவசாயிகள் சங்கத் தலைவர் ராஜேஷ் உழவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் சடையாண்டி, மாட்டுவண்டி கணேசன் மற்றும் விழா கமிட்டியினர் இணைந்து தொடங்கி வைத்து, வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory