» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பள்ளிப் படிப்பை தொடர மாணவிக்கு ஆன்மிக இயக்கம் கல்வி உதவித்தொகை வழங்கல்!

ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 12:54:12 PM (IST)



மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் பள்ளிப்படிப்பை நிறுத்திய மாணவி கல்வியில் தொடர கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.

தூத்துக்குடி அண்ணாநகரைச் சேர்ந்த கோமதியம்மாள் என்பவரின் மகள் கடந்த ஆண்டில் 10 வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றிருந்தார். இந்த நிலையில் மாணவியின் தந்தை இறந்ததால் மாணவிக்கு பள்ளி கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனையறிந்த பங்காரு அம்மா பக்தர்கள் அந்த மாணவி 11ம் வகுப்பு படிப்பைத்தொடர நடவடிக்கை எடுத்தனர்.

திருவிக நகர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் ஆன்மிக இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சக்தி.ஆர்.முருகன் தலைமையில் கல்வி உதவித் தொகையாக ரூ32,500/ மாணவிக்கு வழங்கப்பட்டது. துணைத் தலைவர் திருஞானம், கல்வி செய்திகள் நிறுவனர் பொன் பலவேசராஜா உட்பட பங்காரு அம்மா பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பங்காரு அம்மா பக்தர்கள் நலக் குழுவினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகின்றனர். தற்போது மாணவியின் பாதியில் நின்ற கல்வி தொடர எடுத்த நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory