» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி கே.வி.எஸ். பள்ளியில் 39-வது ஆண்டு விளையாட்டு விழா

ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 10:33:49 AM (IST)



தூத்துக்குடி கே.வி.எஸ். மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் 39-வது ஆண்டு விளையாட்டு விழாப் போட்டிகள், தூத்துக்குடி புனித மேரி கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

விழாவிற்குப் பள்ளித் தலைவர் கே.எஸ்.எஸ்.ஏ. திராவிட மணி தலைமை தாங்கினார். பள்ளித் தலைமை ஆசிரியை மெலிண்டா சூசன் தாமஸ் வரவேற்புரையாற்றி, கடந்த ஆண்டின் விளையாட்டுப் போட்டிகள் குறித்த ஆண்டறிக்கையை வாசித்தார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட வ.உ.சி. துறைமுக விளையாட்டுக்கழகச் செயலாளர் எம்.ஆர். தமிழ்ச்செல்வன், சமாதானப் புறாக்களைப் பறக்கவிட்டு, மாணவ-மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு விளையாட்டுப் போட்டிகளை முறைப்படி தொடங்கி வைத்தார்.

இவ்விளையாட்டுப் போட்டியில் மாணவ-மாணவிகள் நான்கு அணிகளாகப் பிரிக்கப்பட்டு ஓட்டப்பந்தயம், வழுக்கு மரம் ஏறுதல் உள்ளிட்ட 14 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் அதிக அளவிலான தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களைக் கைப்பற்றி, மொத்தம் 105 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த அணிக்குக் கே.வி.எஸ். பள்ளிச் சுழற்கேடயம் வழங்கப்பட்டது.

வெற்றி பெற்ற அணிக்குச் சுழற்கேடயத்தைப் பள்ளித் தலைவர் கே.எஸ்.எஸ்.ஏ. திராவிட மணி, செயலாளர் டி.ஆர். தமிழரசு, பொருளாளர் டி.ஆர். பாலமுருகன் ஆகியோர் இணைந்து வழங்கினர். மேலும், தனிநபர் போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ-மாணவிகளுக்குத் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. விழா முடிவில் பள்ளித் துணைத் தலைமை ஆசிரியை கிறிஸ்டோமெல் மேத்தா நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory