» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 26-ஆம் தேதி பனிமய மாதா ஆலயத் திருவிழா கொடியேற்றம்: ஆகஸ்ட் 5-ல் பெருவிழா!

திங்கள் 20, ஜூலை 2026 4:50:30 PM (IST)

தூத்துக்குடி பனிமய அன்னை திருத்தலப் பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா வரும் 26-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் விமரிசையாகத் தொடங்கவுள்ளது.

தூத்துக்குடி மாநகரின் அடையாளமாகவும், தமிழ்நாட்டில் திருத்தந்தையால் அங்கீகரிக்கப்பட்ட 10 பேராலயங்களில் ஒன்றாகவும் திகழும் பரிசுத்த பனிமய அன்னை திருத்தலப் பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா வரும் ஜூலை 26-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் விமரிசையாகத் தொடங்கவுள்ளது.

இப்பெருவிழாவானது ஜூலை 26 ஞாயிற்றுக்கிழமை தொடங்கி ஆகஸ்ட் 05 புதன்கிழமை வரை தொடர்ந்து நடைபெறவுள்ளது. ஜூலை 26ஆம்தேதி தூத்துக்குடி ஆயர் மேதகு ஸ்டீபன் ஆண்டகை கொடியேற்றி இவ்விழாவினைத் தொடக்கி வைக்கவுள்ளார். இத்தொடக்க விழாவில் ஆயர்கள், குருக்கள், இறைமக்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஆகஸ்ட் 2 (ஞாயிறு) குழந்தைகளுக்கான புதுநன்மைத் திருப்பலி நடைபெறும். அன்று மாலையில் நகரின் முக்கிய வீதிகளில் திரளான இறைமக்கள் பங்கேற்கும் திவ்விய நற்கருணைப் பவணி நடைபெறும். ஆகஸ்ட் 4 (செவ்வாய்) மாலை தூத்துக்குடி ஆயர் ஸ்டீபன் தலைமையில் மாலை ஆராதனையும், கோட்டாறு மறைமாவட்ட ஆயர் மேதகு நசரேன் சூசை மறைவுரையும் நடைபெறும்.

ஆகஸ்ட் 5 புதன்கிழமை (பெருவிழா கூட்டுத் திருப்பலி) ஆயர் ஸ்டீபன், உபகாரிகளுக்கான திருப்பலியை மேனாள் ஆயர் இவோன் அம்புரோஸ் ஆண்டகை ஆகியோர் கூட்டுத் திருப்பலியாக நிறைவேற்றிச் சிறப்பிப்பர்.

அன்னையின் பெருவிழா ஏற்பாடுகளை ஆலய அதிபர் மற்றும் பங்குத்தந்தை ஜான் செல்வம், உதவிப் பங்குத்தந்தையாக ஜெரால்டு, நிர்வாகக் குழுவின் துணைத் தலைவர் அண்டோ, செயலாளர் எட்வின் பாண்டியன், குழுவின் பொருளாளளர் ஜோ சோரிஸ், துணைச் செயலாளர் பெனாட் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory