» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி வாலிபர் அருணாச்சலம் குடும்பத்திற்கு பிரேமலதா விஜயகாந்த் தொலைபேசியில் ஆறுதல்!

சனி 25, ஜூலை 2026 4:40:37 PM (IST)

dmdkArunach.jpg

தூத்துக்குடியில் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த வாலிபர் அருணாச்சலத்தின் குடும்பத்தினருக்கு, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தொலைபேசி வாயிலாக ஆறுதல் தெரிவித்து நிதியுதவி வழங்கியுள்ளார்.

தூத்துக்குடியில் மது விற்பனை செய்ததாகக் கூறி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்பவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அறிந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கட்சியின் மாவட்டச் செயலாளர் தயாளலிங்கம் மூலம் தொலைபேசியில் தொடர்புகொண்டு உயிரிழந்த அருணாச்சலத்தின் தந்தை நாகராஜன், தாய் பரமேஸ்வரி மற்றும் தம்பி சுடலைமணி ஆகியோரிடம் நடந்த விவரங்களைக் கேட்டறிந்து தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, தேமுதிக கட்சி சார்பில் மாவட்டச் செயலாளர் தயாளலிங்கம் உயிரிழந்த அருணாச்சலத்தின் பெற்றோரை நேரில் சந்தித்து நிதியுதவியை வழங்கினார். இந்நிகழ்வின் போது ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் பகுதி செயலாளர்கள் அரச முத்து, வல்லரசு துரை மாவட்ட அவைத்தலைவர் அலெக்சாண்டர் மாவட்ட துணை செயலாளர்கள் லிவிங்ஸ்டன், சம்சுதீன் மாவட்ட பொருளாளர் ராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory