» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 'ஓ.எல்.எஸ் எக்ஸ்போ பொருட்காட்சி : மேயர் ஜெகன் பெரியசாமி திறந்து வைத்தார்!
சனி 25, ஜூலை 2026 9:27:40 PM (IST)

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் 444-வது ஆண்டுத் திருவிழாவை முன்னிட்டு, சவேரியார்புரம் மைதானத்தில் 'ஓ.எல்.எஸ் எக்ஸ்போ 2026' பிரம்மாண்ட பொருட்காட்சித் தொடங்கியது.
உலகப் பிரசித்தி பெற்ற பனிமய மாதா பேராலயத்தின் 444-வது ஆண்டுத் திருவிழா ஜூலை 26-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனையொட்டி, ஓ.எல்.எஸ் நண்பர்கள் பொருட்காட்சிக் குழு சார்பில் தூத்துக்குடி சவேரியார் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் இந்தப் பொருட்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
பொருட்காட்சியின் தலைமை அலுவலகத்தைப் பனிமய அன்னை பேராலய அதிபர் ஜான் செல்வம் மற்றும் புனித சவேரியார் இல்ல அதிபர் சிங்கராயன் ஆகியோர் திறந்து வைத்தனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தொடக்க விழாவில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, நாடாவை வெட்டிப் பொருட்காட்சியை முறைப்படி திறந்து வைத்துச் சிறப்புரையாற்றினார்.
இந்தப் பொருட்காட்சியில் சிறுவர்கள் மற்றும் குடும்பங்கள் மகிழும் வகையில் ராட்சத ராட்டினங்கள் மற்றும் பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் வீட்டு உபயோகப் பொருட்கள், மின்சாதனங்கள் மற்றும் ஆடைகள் விற்பனை அரங்குகள் முன்னணி வணிக நிறுவனங்களின் கண்காட்சி அரங்குகள் மற்றும் உணவகங்கள் உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்நிகழ்ச்சியில்: பிரதீபன் லிபோன்ஸ், அமல்ராஜ் அமிர்தநாதன், புனித சவேரியார் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் அமல்ராஜ் அமிர்தநாதன் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் செல்வின் மாநில மீனவரணி இணைச் செயலாளர் புளோரன்ஸ், மாவட்டத் துணைச் செயலாளர் முருக இசக்கி பொருட்காட்சிக் குழுத் தலைவர் டென்சிங், செயலாளர் ஏ.டி.எஸ். அருள், பொருளாளர் ஏ.பி. நிர்மலா உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரோச் பார்க் பகுதியில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது!
சனி 25, ஜூலை 2026 9:33:13 PM (IST)

தூத்துக்குடி பனிமய மாதா திருவிழா கொடி பவனி கோலாகலம்!
சனி 25, ஜூலை 2026 9:19:22 PM (IST)

பருவமழைக்கு முன் பாசனக் கால்வாய்கள், குளங்களை சீரமைக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியரிடம் பாஜக கோரிக்கை!
சனி 25, ஜூலை 2026 8:18:31 PM (IST)

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை!
சனி 25, ஜூலை 2026 5:26:23 PM (IST)

தூத்துக்குடி வாலிபர் அருணாச்சலம் குடும்பத்திற்கு பிரேமலதா விஜயகாந்த் தொலைபேசியில் ஆறுதல்!
சனி 25, ஜூலை 2026 4:40:37 PM (IST)

திருச்செந்தூரில் பல கோடி மதிப்பில் வளர்ச்சித் திட்டப் பணிகள் : சுற்றுலாத்துறை இயக்குநர் நேரில் ஆய்வு!
சனி 25, ஜூலை 2026 3:11:25 PM (IST)








